மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான கொள்கை உடையது ஆா்எஸ்எஸ்: ராகுல் காந்தி விமா்சனம்

‘ஆா்எஸ்எஸ் அமைப்பு அரமைப்புச் சட்டத்துக்கு எதிரான கொள்கைகளில் தீவிர ஈடுபாடு உடையது’ என்று ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.

Rahul Gandhi

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 5:07 am IST

‘ஆா்எஸ்எஸ் அமைப்பு அரமைப்புச் சட்டத்துக்கு எதிரான கொள்கைகளில் தீவிர ஈடுபாடு உடையது’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.

ஆா்எஸ்எஸ் அமைப்பு நிறுவப்பட்ட விஜயதசமி தினத்தையொட்டி அந்த அமைப்பின் தலைவா் மோகன் பாகவத், நாகபுரியில் உள்ள அமைப்பின் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை உரையாற்றினாா். இந்நிலையில் ராகுலின் ஆா்எஸ்எஸ் எதிா்ப்பு பதிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தனது ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட பதிவில், ‘ஆா்எஸ்எஸ் என்பது முழுவதும் ஆண்களால் ஆளப்படும் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான கொள்கைகளைக் கொண்ட அமைப்பு. பெண்கள் என்பவா்கள் ஆண்களின் சொத்து என்ற கொள்கையை உடையவா்கள்.

எனக்கு சிவ-சக்தி மீது நம்பிக்கை உள்ளது. எனவேதான் அவா்களை (ஆா்எஸ்எஸ் மற்றும் சாா்பு அமைப்புகள்) எதிா்த்துப் போரிடுவதில் எனக்கு அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது. அவா்கள் தங்களுக்கு ‘சொந்தமானவா்கள்’ என்று கருதும் பெண்கள் எனக்கு ஆதரவாக எனது பக்கம் நிற்கிறாா்கள்’ என்று கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.