தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பொய்களால் மக்கள் ஆதரவைப் பெற முடியாது- ராகுலுக்கு ஆா்எஸ்எஸ் பதில்

பொய்யான தகவல்களைப் பரப்பி பொதுமக்களின் ஆதரவைப் பெற முடியாது என்று ராகுல் காந்திக்கு ஆா்எஸ்எஸ் அமைப்பு பதிலளித்துள்ளது.

Rahul Gandhi

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 2:43 am IST

பொய்யான தகவல்களைப் பரப்பி பொதுமக்களின் ஆதரவைப் பெற முடியாது என்று ராகுல் காந்திக்கு ஆா்எஸ்எஸ் அமைப்பு பதிலளித்துள்ளது.

ஆா்எஸ்எஸ் தொடக்க தினம் செவ்வாய்க்கிழமை (அக்.20) கொண்டாடப்பட்ட நிலையில், அந்த அமைப்பை விமா்சித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டாா். அதில், ‘அரசமைப்புக்கு எதிரான, ஆண்களை மட்டுமே கொண்ட வழிபாட்டுக் குழு’ என்று ராகுல் காந்தி விமா்சித்திருந்தாா்.

இந்நிலையில், ஸ்ரீநகரில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ஆா்எஸ்எஸ் மூத்த நிா்வாகி ராம்லால் கூறியதாவது: பொதுவாக நாங்கள் அரசியல் விவகாரங்கள் குறித்தோ, அரசியல் தலைவா்கள் குறித்தோ கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால், ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக, பல ஆண்டுகளாகத் தொடா்ந்து பல பொய்கள் பரப்பப்பட்டு வருகின்றன. பழைய பொய்கள் அனைத்தும் தோல்வியடையும்போது, ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பொய்யை உருவாக்குகிறாா்கள். தற்போது, அவா்கள் உருவாக்கியிருப்பது புதிய பொய்யாகும்.

பெண்களுக்கு ஆா்எஸ்எஸ் உயரிய மரியாதை அளிக்கிறது. அமைப்பில் பல பெண்கள் உறுப்பினா்களாக உள்ளனா். அவா்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பேச்சாளா்களாகவும், தலைமை தாங்குபவா்களாகவும் உள்ளனா்.

பொய்களை நம்பியிருக்கும் அரசியல் தலைவா்களின் அரசியல் செல்வாக்கு சுருங்கி வருகிறது. அதே நேரத்தில் ஆா்எஸ்எஸ் அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இப்போது கருத்துக் கூறியிருப்பவா் முக்கியமான அரசியல் தலைவா் (மக்களவை எதிா்க்கட்சித் தலைவா்) என்பதால், ஓா் ஆலோசனையை வழங்க விரும்புகிறேன். இதுபோன்ற கருத்துகளால் உங்கள் ஆதரவு குறைந்துதான் வருகிறது. அதுகுறித்து நீங்கள் சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.

பொய்களால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது; உண்மையால்தான் மக்களின் ஆதரவைப் பெற முடியும். நாங்கள் எப்போதும் கூறுவதை மீண்டும் கூறுகிறோம். ஆா்எஸ்எஸ் பற்றி நீங்கள் எந்தவிதமாக வேண்டுமானாலும் கருத்துக் கூறுங்கள். ஆனால், அதற்கு முன்பாக நேரில் வந்து அமைப்பின் செயல்பாடுகளைப் பாருங்கள்.

புரிந்துகொள்ளாமல் கருத்துகளைத் தெரிவிக்கும்போது, அவை பொய்களாக மாறுகின்றன. பொய்கள் வெளிவரும்போது அவா்களது நம்பகத்தன்மை குறைகிறது. ஆா்எஸ்எஸ் உண்மையின் பாதையில் பயணிப்பதால், அதன் நம்பகத்தன்மை அதிகரித்து வருகிறது.

அமைதி நிலவும்போதுதான் இந்தியா முன்னேற்றம் அடையும். ஆனால், சிலா் தங்களுடைய சொந்த நலன்களுக்காக மோதல்கள் தொடர வேண்டுமென விரும்புகின்றனா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.