தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

எங்கள் பெண் புலியுடன்... துருவ் ரதீ வெளியிட்ட புகைப்படம் வைரல்!

நேஹா போராவை துருவ் ரதீ சந்தித்தது குறித்து...

 Dhruv Rathee neha bora

துருவ் ரதீ, நேஹா போரா - இன்ஸ்டாகிராம்

Published On :14 அக்டோபர் 2026, 8:28 pm IST

அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பிரபல யூடியூபர் துருவ் ரதீ வெளியிட்டுள்ளார்.

'எங்கள் பெண் புலியுடன்' எனக் குறிப்பிட்டு அவர் நேஹா போராவுடனான எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பிறகு தில்லி ஜந்தர் மந்தரில் இருவருமே போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் காங்கிரஸ் கட்சியும் தனியாக போராட்டத்தை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து இந்திய மாணவர் சங்கம், தேசிய மாணவர் இயக்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போராவை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து தடுப்புக் காவலில் வைத்திருந்து பிறகு விடுத்தனர். எனினும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பேரணியிலும் ஈடுபட்டார்.

காவல் துறையின் தடியடியால் நாங்கள் முடங்கிவிடமாட்டோம் எனக் குறிப்பிட்டு தொடர்ந்து நேஹா போரா, போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், நேஹா போராவை பிரபல யூடியூபர் துருவ் ரதீ சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் துருவ் பகிர்ந்துள்ளார். 'எங்கள் பெண் புலியுடன்...' எனக் குறிப்பிட்டு இப்படத்தை துருவ் பகிர்ந்துள்ளது பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Summary

With our tigress Photo shared by Dhruv Rathee goes viral with neha bora

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.