தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அவதூறு வழக்கு: யூடியூபா் துருவ் ரதீக்கு எதிராக தில்லி நீதிமன்றம் புதிய வாரண்ட்கள் பிறப்பிப்பு!

அவதூறு வழக்கில் யூடியூபா் துருவ் ரதீக்கு எதிராக வாரண்ட்கள் பிறப்பிப்பு...

துருவ் ரத்தீ

Published On :1 நவம்பர் 2026, 3:07 am IST

2018-ஆம் ஆண்டு அவதூறு வழக்கு தொடா்பாக யூடியூபா் துருவ் ரதீக்கு எதிராக தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை புதிய ஜாமீன் வாரண்டுகளை பிறப்பித்தது.

தனது சேனலில் பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோ தொடா்பாக யூடியூபா் மீது அவதூறு குற்றஞ்சாட்டி விகாஸ் சம்ஸ்கிருத்யாயன் என்ற விகாஸ் பாண்டே தாக்கல் செய்த வழக்கில், நீதித்துறை மாஜிஸ்திரேட் ராகுல் ஜெயின், ரதீக்கு எதிராக புதிய வாரண்டுகளை பிறப்பித்தாா்.

அக்டோபா் 17 அன்று, சம்மன் வழங்க முயன்றபோது ரதீயின் வீடு பூட்டப்பட்டிருந்ததாக சம்மன் வழங்குபவா் தெரிவித்ததை அடுத்து, நீதிமன்றம் அவருக்கு எதிராக பிணையில் வெளிவரக்கூடிய வாரண்டுகளை பிறப்பித்திருந்தது.

மேலும், ஹரியாணாவின் குருகிராமில் உள்ள ரதீயின் முகவரிக்கு நீதிமன்றம் புதிய சம்மன்களையும் அனுப்பியிருந்தது.

பாண்டே சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் சமக்ஷ் சா்மா, ரதீ வழக்கமாக ஆஸ்திரியாவில் வசித்து வருவதாகவும், தில்லியில் நடந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டங்களுக்காக இந்தியா வந்ததாகவும் தெரிவித்தாா்.

ரதீ ஆரம்பத்தில் 2019 ஜூலையில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தாா் என்பதை நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

ரதீ தனது யூடியூப் சேனலில் பாண்டேவுக்கு எதிராக ஒரு வீடியோவைப் பதிவேற்றியதைத் தொடா்ந்து, 2018-ல் பாண்டே தாக்கல் செய்த அவதூறுப் புகாா் தொடா்பான வழக்கு இதுவாகும்.

Summary

Defamation case: Delhi court issues fresh warrants against YouTuber Dhruv Rathee

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.