மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அபிஜீத் தீப்கே, நேஹா போராவை தடுப்புக் காவலில் வைத்தது சட்டவிரோதம்’ - மு.க. ஸ்டாலின்

அபிஜீத் தீப்கே, நேஹா போராவை காவலில் வைத்திருப்பது சட்டவிரோதச் செயல்’ என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளதைப் பற்றி...

MK Stalin

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - (கோப்புப் படம்)

Published On :16 அக்டோபர் 2026, 9:13 pm IST

அபிஜீத் தீப்கே, நேஹா போராவை காவலில் வைத்திருப்பது சட்டவிரோதச் செயல்’ என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபி மற்றும் ஏராளாமான மாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை போராட்டம் நடத்தக் கூடிய இடங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஜந்தர் மந்தரில் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிர்வாகிகள் அஷுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு 5 நாள்கள் நீதிமன்றக் காவலில் வியாழக்கிழமை (அக். 15) திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதைத்தொடர்த்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ததை எதிர்த்து கன்னாட் பிளேஸில் தேசியக் கொடியுடன் வரும் வெள்ளிக்கிழமை (அக். 16) போராட்டம் நடத்தவுள்ளதாக, சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே அறிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, தில்லியில் அபிஜீத் தீப்கே தங்கியிருந்த பகுதிக்கு நேரில் சென்ற பெண் காவலர்கள் உள்பட 15 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள், அனுமதி அளிக்காததால் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று நோட்டீஸ் வழங்கினர்.

போராட்டத்திற்கு செல்லக் கூடாது என அபிஜீத் தீப்கேவிற்கு போலீஸ் தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த நிலையில், அவர் போராட்டத்திற்கு செல்ல முயன்றார். கன்னாட் பிளேஸில் பிஎன்எஸ்எஸ் பிரிவு 163 அமலில் உள்ளதால் அபிஜீத் தீப்கேவுக்கு தில்லி போலீஸ் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி கன்னாட் பிளேஸில் போராட்டம் நடத்த புறப்பட்ட அபிஜீத் தீப்கேவை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில், அபிஜீத் தீப்கே, நேஹா போராவை காவலில் வைத்திருப்பது சட்டவிரோதச் செயல்’ என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “எங்கே இருக்கிறார்கள் என்ற தகவலே தராமல் அவர்களைத் தடுத்து வைத்திருப்பது, அப்பட்டமான சட்டவிரோதம், மனிதாபிமானமற்ற செயல். அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதை நிறுத்துவிட்டு, மத்திய அரசு அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

இந்த நடவடிக்கையை நசுக்க மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சியும், அதை இன்னும் வலிமையாக்கவே செய்யும். ஞானேஷ்குமார் ராஜிநாமா செய்ய வேண்டும். மத்திய பாஜக அரசுக்கு வேறு வழியில்லை” எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

DMK leader M.K. Stalin has stated that the detention of Abhijit Dipke and Neha Bora without disclosing their whereabouts is blatantly illegal and deeply inhumane.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.