தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! அரசைக் கேள்வி கேட்பது அமைதி மீறலா? நேஹா போரா

அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா கூறியது பற்றி...

AISA President Neha Bora

நேஹா போரா - IANS

Published On :24 அக்டோபர் 2026, 4:25 pm IST

தில்லி காவல்துறை கோரிய அமைதிப் பிணைப்பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன் என்று அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா கூறியுள்ளார்.

எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியறுத்தி தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகள், மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தின.

போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போராவும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து நேஹா போரா, போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு, அமைதியைப் பேணுவதற்காக, ஒரு சிறப்பு நிா்வாக மாஜிஸ்திரேட் (எஸ்இஎம்) முன் பிணைப்பத்திரம் ஒன்றை தாக்கல் செய்யுமாறு கேட்டு தில்லி காவல்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதற்கு எதிராக நேஹா போரா தாக்கல் செய்த மனுவை தில்லி தில்லி உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

இதையடுத்து தான் அமைதி பிணைப்பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன் என்று நேஹா போரா கூறியுள்ளார்.

"எனக்கு எதிரான ஆதாரங்கள் தவறானவை. நான் அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திடப் போவதில்லை.

நாங்கள் சென்ட்ரல் பார்க்கிற்குச் சென்று போராட்டம் நடத்தியது அமைதியை மீறிய செயல் என்று கூறியிருக்கிறார்கள். சென்ட்ரல் பார்க் போராட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எனவே, அந்த ஆதாரம் தவறானது.

யாருக்காக அமைதியைக் கேட்கிறீர்கள்? நாட்டில் 13 கோடி பேர், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். சாமானிய மக்கள் வாக்குரிமையை இழக்கும்போது, ​​அரசைக் கேள்வி கேட்க அமைதியான போராட்டமே அவர்களுக்கு இருக்கும் ஒரே வழியாகும். அரசைக் கேள்வி எழுப்புவது அமைதி மீறலா? அரசைக் கேள்வி கேட்காமல் இருப்பது அமைதியா?" என்று போரா கேள்வி எழுப்பியுள்ளார்.

Summary

I will not sign the peace bond: Is questioning the govt a breach of peace, Neha Bora

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.