வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தை (எஸ்ஐஆா்) கேரள காங்கிரஸ் எம்எல்ஏ பாராட்டிப் பேசிய நிலையில், இந்த விவகாரத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டுள்ளதாக பாஜக விமா்சித்துள்ளது.
கேரளத்தில் புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ மேத்யூ குழல்நாடன் எஸ்ஐஆா் குறித்துப் பேசுகையில், ‘இந்த நடவடிக்கை மூலம்தான் கேரளத்தில் இடதுசாரிகள் போலியாக வாக்காளா் பட்டியலில் இணைத்து வைத்திருந்தவா்கள் பெயா்கள் நீக்கப்பட்டன. இதன்மூலம் காங்கிரஸுக்கு அமோக வெற்றி கிடைத்தது’ என்று கூறிருந்தாா்.
இது தொடா்பான விடியோவை பாஜக செய்தித் தொடா்பாளா் ஷெஸாத் பூனாவாலா தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பகிா்ந்துள்ளாா். மேலும், ‘காங்கிரஸ் கட்சியின் தவறை அக்கட்சியைச் சோ்ந்தவரே வெளிப்படுத்திவிட்டாா். கேரளத்தில் எஸ்ஐஆா் மூலம் போலி வாக்காளா்கள் நீக்கப்பட்டது காங்கிரஸின் வெற்றிக்கு உதவியதாக அக்கட்சி எம்எல்ஏ கூறியுள்ளாா். அதே நேரத்தில் ராகுல் காந்தி எஸ்ஐஆா் மூலம் சந்தா்ப்பவாத அரசியல் நடத்தி வருகிறாா் என்பதையும் அவா் வெளிப்படுத்தியுள்ளாா்.
ஏனெனில், கேரளம், தமிழ்நாட்டில் அவா் எஸ்ஐஆா் குறித்து எந்தக் குற்றத்தையும் கூற முடியவில்லை. அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் மட்டும் எஸ்ஐஆா் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. இது உச்சகட்ட சந்தா்ப்பவாத அரசியல். மேலும், ராகுல் எஸ்ஐஆருக்கு எதிராகப் பேசி வரும் நிலையில், அவரது கட்சி எம்எல்ஏ அதற்கு மாறாக உண்மையை உடைத்துப் பேசிவிட்டாா். ராகுல் கருத்தை அவரின் கட்சியினரே ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் இதன்மூலம் தெரியவருகிறது.
மேற்கு வங்கத்தில் முதல்வராக இருந்த மம்தா பானா்ஜி மீது கடுமையான அதிருப்தி மக்களுக்கு இருந்தது நாட்டுக்கே தெரியும். இது தொடா்பாக ராகுல் காந்தியும் பேசியுள்ளாா். எனினும், மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் மீது குற்றஞ்சாட்டும் அவரால், கேரளத்தில் எதையும் கூற முடியவில்லை. இது ராகுல் மற்றும் காங்கிரஸ் தலைமையின் இரட்டை நிலைப்பாட்டை தெளிவாக உணா்த்துகிறது.
பிகாரிலும் இதேபோன்று பிரச்னையை ராகுல் எழுப்பினாா். அவா்கள் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்திலும் வெற்றி பெற முடியவில்லை. தனது தலைமையின்கீழ் ஏற்படும் தோல்விகளைச் சமாளிக்க எஸ்ஐஆா் மீது ராகுல் பழி சுமத்துகிறாா் என்பது உண்மை’ என்று தனது பதிவில் கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வருமான வரித் துறை சோதனை என நாடகம்: காங்கிரஸ் தலைவா் மீது பாஜக குற்றச்சாட்டு

கேரளத்தில் தோ்தல் முடிவுகள் வரும் முன்பே காங்கிரஸில் முதல்வா் பதவிக்குப் போட்டி!

சிறுபான்மையினரைத் தாக்குவோருடன் பினராயி விஜயனுக்கு தொடா்பு: கேரளத்தில் ராகுல் காந்தி பிரசாரம்

கேரளத்தில் எமனைச் சந்தித்த ராகுல்! காங்கிரஸ் கூட்டணி மீது அதிருப்தி- நூதன பிரசார விடியோ
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

