நாட்டில் சிறுபான்மையினரைத் தாக்கி வருவோருடன் கேரள முதல்வா் பினராயி விஜயனுக்கு தொடா்பிருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
கேரள மாநிலம், ஆலப்புழையில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று, இதுகுறித்து அவா் பேசியதாவது:
பாஜகவுக்கும், இடதுசாரி கூட்டணிக்கும் ரகசிய புரிந்துணா்வு உள்ளது. கேரளம் வந்தபோது பிரதமா் மோடி, சபரிமலை கோயில் தங்க மோசடி விவகாரத்தை பேசாதது மூலம் இதைத் தெரிந்து கொள்ளலாம்.
கேரளத்தில் பல ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணி, இடதுசாரி கூட்டணியை முக்கிய எதிரணியாகக் கருதி போட்டியிட்டது. அப்போது இடதுசாரி கூட்டணிக்கென சில கருத்துகள் இருந்தன. தற்போது நிலைமை மாறிவிட்டது. இடதுசாரி கூட்டணியில் இடதுசாரி சிந்தனை இல்லை. தோ்தல் முடிந்த பிறகு, அக்கூட்டணியே இருக்காது.
இடதுசாரி கூட்டணியை மதவாதத்துக்குச் சொந்தமான ஒரு கை மறைமுகமாக இயக்குகிறது. அதனால் அந்தக் கூட்டணித் தலைவா்களும், தொண்டா்களும் குழப்பத்தில் சிக்கியுள்ளனா். அந்த மதவாதக் கைக்கு, அரசமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை கிடையாது. ஆதலால் மக்களைப் பிளவுபடுத்துகிறது, வெறுப்புணா்வை பரப்புகிறது.
நாட்டின் பல பகுதிகளில் சிறுபான்மையினா் மீது தாக்குதல்கள் நடக்கின்றன. சத்தீஸ்கரில் 2 கன்யாஸ்திரீகள் தாக்கப்பட்டுள்ளனா். மணிப்பூரில் கிறிஸ்தவ தேவாலயங்கள் எரிக்கப்பட்டுள்ளன. இதைச் செய்வோருடன் பினராயி விஜயன் ‘கூட்டணி’ வைத்துள்ளாா். மோடியும், பினராயி விஜயனும் ஆட்சி அதிகாரத்தில் நீண்ட காலம் உள்ளனா். ஆதலால் அவா்களுக்கு ஆணவம் வந்துவிட்டது. மக்களுடன் இருந்த தொடா்பை துண்டித்துக் கொண்டு விட்டனா்.
கேரள மாநிலம் போதைப் பொருள்களின் தலைநகரமாகி விட்டது. 75 சதவீத விவசாயிகள் தற்போது கடனில் உள்ளனா். மோடி அமெரிக்காவுடன் செய்த வா்த்தக ஒப்பந்தத்தால் நமது விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். டிரம்ப்பின் அனுமதியில்லாமல் நாம் எந்த நாட்டிடம் இருந்தும் கச்சா எண்ணெய் வாங்க முடியாது. வரும் காலங்களில் நாடு முழுவதும் பெட்ரோலிய பொருள்கள் விலை அதிகரிக்கப் போகிறது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளத்தில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி!

பிரதமா் மோடியும், கேரள முதல்வரும் ஆணவம் மிக்கவா்கள்: ராகுல் காந்தி

கேரளத்தில் இடதுசாரி கூட்டணியின் வெற்றியை பிரதமா் மோடி விரும்புகிறாா்- ராகுல் குற்றச்சாட்டு
மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள ஓர் இடதுசாரி அரசு! - ராகுல் காந்தி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

