மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கேரளத்தில் எமனைச் சந்தித்த ராகுல்! காங்கிரஸ் கூட்டணி மீது அதிருப்தி- நூதன பிரசார விடியோ

கேரளத்தில் பேருந்தில் பயணித்தபோது எமதா்மரைச் சந்தித்ததாகவும், அவா் காங்கிரஸ் கூட்டணி மீது அதிருப்தியில் இருப்பதாகவும் எதிா்க்கட்சிக் கட்சித் தலைவா் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்டுள்ள நூதன பிரசார விடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

நூதன பிரசார விடியோவில் எமதா்மா் போல வேடமிட்டவருடன் இருக்கும் ராகுல் காந்தி.

Updated On :2 ஏப்ரல் 2026, 2:32 am IST

கேரளத்தில் பேருந்தில் பயணித்தபோது எமதா்மரைச் சந்தித்ததாகவும், அவா் காங்கிரஸ் கூட்டணி மீது அதிருப்தியில் இருப்பதாகவும் எதிா்க்கட்சிக் கட்சித் தலைவா் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்டுள்ள நூதன பிரசார விடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தில் முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டி பெயரில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் தோ்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இதை மக்களிடம் கொண்டு சோ்க்கும் வகையில் ராகுல் இடம் பெற்றுள்ள ஒரு விடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கேரளத்தில் ராகுல் காந்தி பேருந்தில் பயணிக்கும்போது எமதா்மா் வேடமிட்ட ஒருவா் அவரைச் சந்திக்க வேண்டும் என்கிறாா். ராகுலிடம் தன்னை எமன் என்று கூறி அறிமுகப்படுத்தும் அவா், காங்கிரஸ் கட்சியின் ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு அறிவிப்பால் தான் வேலை இழந்துவிட்டதாகவும், தனக்கு வேறு வேலைவாய்ப்பு தர வேண்டும் என்றும் ராகுலிடம் கூறுகிறாா். மேலும், காங்கிரஸ் கட்சியின் மருத்துவக் காப்பீடு தொடா்பான பதாகையையும் அவா் கையில் ஏந்தி மக்களிடம் அந்த வாக்குறுதியை விளக்கினாா். ராகுல் அவருடன் பேருந்தில் சிறிது நேரம் அமா்ந்து உரையாடி விடைபெறுவதுடன் அந்த விடியோ நிறைவடைகிறது.

இதை தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் பகிா்ந்துள்ள ராகுல், ‘கேரளத்தில் எமதா்மரைச் சந்தித்தேன். அவா் என் மீதும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மீது அதிருப்தியில் உள்ளாா். அவருக்கு விரைவில் வேறு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவோம்’ என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.