ஆந்திர மாநிலத்தில் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என அம்மாநில அரசு இன்று (மார்ச் 31) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“இந்த நடைமுறை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. இதன்படி, கைத்தறிகளுக்கு 200 அலகுகளும் (யூனிட்), விசைத்தறிகளுக்கு 500 அலகுகளும் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு சுமார் ரூ. 150 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டணச் சுமையைக் குறைப்பதையும், நெசவுத் தொழிலை ஊக்குவிப்பதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டம் சுமார் ஒரு லட்சம் கைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கும் 11,488 விசைத்தறி இயந்திரங்களுக்கும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகுதிவாய்ந்த கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் ஆண்டுக்கு சுமார் ரூ. 8,640 சேமிக்க முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது; அதேவேளையில், விசைத்தறி இயக்குபவர்கள் ஆண்டுதோறும் ரூ. 21,600 வரை சேமிக்க இயலும்.
நெசவாளர்களுக்கான ஓய்வூதியத்தை மாதம் ரூ. 4,000 ஆக உயர்த்துதல், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்குச் சேமிப்பு நிதியாக ரூ. 5 கோடி ஒதுக்குதல் மற்றும் நவீன இயந்திரங்களை வாங்குவதற்கு 90 சதவிகிதம் வரை மானியம் வழங்குதல் ஆகியவையும் இந்தத் திட்டத்தில் அடங்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
The Andhra Pradesh government today announced that free electricity will be provided to weavers in the state.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு

கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி!

மகளிர் இடஒதுக்கீடு ரத்து முட்டுக்கட்டை அல்ல, பெண்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்: ஆந்திர முதல்வர்

ஆந்திரத்தின் தலைநகர் அமராவதி! அரசிதழில் வெளியீடு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

