கொடைக்கானலில் வாகனங்கள் செல்ல 2 நாள்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் அனைத்து சுற்றுலா இடங்களுக்கும் வாகனங்கள் உள்ளே நுழைவதற்கு கடந்த ஜனவரி 12 ஆம் தேதி முதல் ஒரே இடத்தில் ‘க்யூ ஆர் கோடு’ மூலம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையால் பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இதையடுத்து வாடகை வாகன ஓட்டுநர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஏற்கெனவே கோடை காலம் என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூண்பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் ஆகிய பகுதிகளில் வாகனங்களுக்கு மே 3 ஆம் தேதி வரை இலவச அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 4 ஆம் தேதி முதல் கொடைக்கானலில் 5 இடங்களில் வரிசையில் நிற்காத அளவுக்கு உடனடியாக ‘க்யூ ஆர் கோடு’ மூலம் டிக்கெட் பெறும் நடைமுறை செயல்படுத்தப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
Summary
Two Days of Free Entry for Vehicles in Kodaikanal
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்!
இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!

செஞ்சிக்கோட்டையில் இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச அனுமதி

ஆந்திரம்: நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

