/

மீண்டும் ஊரடங்கு? மத்திய அமைச்சர் பதில்!

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பதில்...

News image

ஊரடங்கு - கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 12:26 pm IST

சர்வதேச அளவிலான எரிவாயு தட்டுப்பாடுக்கு மத்தியில் இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்ற வதந்திக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து, மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளதாவது, "சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த ஒரு மாதத்தில் ஒரு பீப்பாயின் விலை சுமார் 70 டாலரிலிருந்து 122 டாலராக உயர்ந்துள்ளது.

இதனால், உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுமார் 30 சதவிகிதம் முதல் 50 சதவிகிதமும், வட அமெரிக்க நாடுகளில் 30 சதவிகிதமும், ஐரோப்பாவில் 20 சதவிகிதமும், ஆப்பிரிக்க நாடுகளில் 50 சதவிகித அளவிலும் விலை உயர்ந்துள்ளது.

இதனிடையே. மோடி அரசுக்கு இரு விருப்பங்கள் மட்டுமே இருந்தன. ஒன்று - மற்ற நாடுகளைப்போல விலையை அதிகரிப்பது, அல்லது மற்றொன்றாக சர்வதேச நிலையற்ற தன்மையிலிருந்து இந்திய மக்களை பாதுகாக்க, நாட்டின் நிதிச்சுமையைச் சுமப்பது.

ரஷியா - உக்ரைன் மோதல் தொடங்கிய 4 ஆண்டுகளிலிருந்தே, அரசின் உறுதிப்பாட்டைக் கருத்தில்கொண்டு, மக்களைப் பாதுகாக்கும் நோக்கில், நிதிச்சுமையை பிரதமர் மோடி தாங்கி வருகிறார்.

சர்வதேச அளவிலான பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக, ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் எந்தவொரு சுத்திகரிப்பு நிலையமும் ஏற்றுமதி வரியைச் செலுத்த வேண்டியிருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "இந்தியாவில் ஊரடங்கு பற்றிய வதந்திகள் முற்றிலும் தவறானவை. இதை நான் தெளிவாகக் கூறுகிறேன். அத்தகைய முன்மொழிவு எதுவும் பரிசீலனையில் இல்லை.

இத்தகைய நேரங்களில் நாம் அமைதியாகவும், பொறுப்பாகவும், ஒற்றுமையாகவும் இருப்பது முக்கியம். இதுபோன்ற சூழ்நிலைகளில் வதந்திகளைப் பரப்புவதற்கும், பீதியை ஏற்படுத்தும் முயற்சிகள் தீங்கு விளைவிக்கக் கூடும்" என்றும் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

Summary

Rumours of a lockdown in India are completely false, says Union Minister Hardeep Singh Puri

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.