மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக பாகிஸ்தான் உருவெடுத்திருப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

News image

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் - விடியோ க்ளிப்

Updated On :30 ஏப்ரல் 2026, 1:17 pm IST

சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக பாகிஸ்தான் உருவெடுத்திருப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

தில்லியில் நடைபெற்ற என்ஐஏ தேசிய பாதுகாப்பு உச்சி மாநாடு 2.0-வில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது, "ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, எங்களைத் தாக்கியவர்களை நாங்கள் துல்லியமாகக் குறிவைத்துத் தாக்கினோம். அதுமட்டுமின்றி, எங்கள் திறன் குறைந்ததால்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது என்பது பொய் என தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நாங்கள் எங்களின் சொந்த நிபந்தனைகள் மற்றும் விருப்பத்தின்பேரிலேயே போரை நிறுத்தினோம். ஒரு நீண்ட போருக்கு நாங்கள் முழுமையாகத் தயாராக இருந்தோம்.

ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவை ஒரே திட்டத்தின்கீழ் இணைந்து செயல்படுவதன் மூலம், ஒரு கூட்டு மற்றும் ஒருங்கிணைந்த சக்தியாக இயங்குவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு சூழ்நிலையிலும் எந்தவொரு பயங்கரவாத செயலும் பொறுத்துக்கொள்ளப்படாது.

பாகிஸ்தான் போன்ற நாடுகள் தொடர்ந்து பயங்கரவாதத்தை ஆதரித்து வருவதை நாம் பார்த்திருக்கிறோம்.

இந்தியா தகவல் தொழில்நுட்பத்தில் (Information Technology) உலகளவில் அறியப்பட்டு வரும் அதே வேளையில், பாகிஸ்தானின் மற்றொரு சர்வதேச பயங்கரவாதத்தின் (IT - International Terrorism) மையப்புள்ளியாக உருவெடுக்கிறது

மதம் அல்லது வன்முறை சித்தாந்தத்தின் பெயரில் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முயற்சிப்பது, பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்குச் சமம்" என்று தெரிவித்தார்.

Summary

India leads in information technology, Pakistan in international terrorism, says Defence Minister Rajnath Singh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.