விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் உயிரிழப்பு!

ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!

News image

கலப்படமான பாலைக் குடித்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை - Center-Center-Vijayawada

Updated On :22 மார்ச் 2026, 4:50 pm IST

ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கலப்படமான பாலைக் குடித்ததால் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 16 பேர் உயிரிழந்ததாக அம்மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி கே. வெங்கடேஷ்வர ராவ் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 22) தெரிவித்தார். மேலும், மூவர் ராஜமகேந்திரவரம் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜமகேந்திரவரத்தில் வீடுகளுக்கே வந்து பால் விநியோகிக்கும் ஒரே வியாபாரியிடம்தான் பால் வாங்கி அருந்திய குடும்பங்களில் பலருக்கும் கடந்த பிப். 22-இல் உடல்நிலை மிகவும் மோசமாகி அப்பகுதியிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

அந்த வியாபாரி உள்ளூா் கால்நடை விவசாயிகளிடமிருந்தும் பால் கொள்முதல் செய்து வீடுகளுக்கு விநியோகித்து வந்துள்ளாா் என்பதும், கலப்பட பாலை குடித்தோரின் சிறுநீரகம் முதலில் செயலிழந்ததும், பிறகு சிறுநீா் தடைபட்டு உயிரிழப்பு ஏற்பட்டதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தை தொடா்ந்து, பால் மாதிரியை சேகரித்து, பல்வேறு ஆய்வு கூடங்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனா். இதேபோல், பல குழுக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனா். சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மருத்துவக் குழுக்கள் ஆய்வு நடத்தி வருகின்றன என்று தெரிவித்தனா்.

Summary

Adulteration case in Andhra Pradesh’s East Godavari district has claimed 16 lives, District Medical and Health Officer K. Venkateswara Rao said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.