வலது காலில் ஏற்பட்டுள்ள லேசான தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக மகளிரணி தேசியத் தலைவரும் கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளருமான வானதி சீனிவாசன் முழுமையாக குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வானதி சீனிவாசன், கடந்த சில நாள்களாக தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இதனிடையே, வலது காலில் வீக்கம், வலி காரணமாக கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
அவரது காலில் லேசான தொற்று இருப்பதாகவும், இதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் 2 நாள்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்திருந்தது. பின்னர், தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும்போது வழங்கப்பட்ட ஒரு மருந்தால் அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். முழுமையாக குணமடைவதற்கு அவருக்கு குறைந்தது 3 முதல் 4 நாள்கள் வரை சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தற்போது வானதி சீனிவாசன் சிகிச்சையின் மூலம் முழுமையாக குணமடைந்துள்ளார் எனவும் சிகிச்சை முடிந்து நாளை(ஏப். 17) வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
வானதிக்குப் பதிலாக அவரது மகன்கள் தேர்தல் பணிகளை முழுமையாக ஏற்றுத் தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
Hospital provides update on Vanathi Srinivasan's health condition.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜெயகுமார், சி.வி.சண்முகம், வானதி சீனிவாசன் சொத்து விவரங்கள் முரண்பாடு: விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு

திமுகவுக்கு எதுவோ அதுதான் எங்களுக்கும்! வானதி சீனிவாசன் சிறப்பு நேர்காணல்

உடல்நிலை குறித்து விடியோ வெளியிட்ட வானதி சீனிவாசன்!

மருத்துவமனையில் வானதி சீனிவாசன்! அவருக்காக பிரசாரம் செய்யும் அண்ணாமலை?
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

