மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தவெக தேர்தல் அறிக்கையின் 10 முக்கிய அம்சங்கள்!

தவெக தேர்தல் அறிக்கையின் 10 முக்கிய அம்சங்கள் குறித்து...

News image

தவெக தலைவர் விஜய் - படம்: தவெக ஐடி விங்

Updated On :16 ஏப்ரல் 2026, 5:01 pm IST

தமிழக வெற்றிக் கழகத்தின் முழு தேர்தல் அறிக்கையை அந்தக் கட்சியின் தலைவர் விஜய் இன்று (ஏப். 16) வெளியிட்டு, 10 முக்கிய அம்சங்களை வாசித்தார்.

தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில், அந்தந்த பகுதி சார்ந்த மக்களுக்கான செயல் திட்டங்களை அறிவித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று (ஏப். 16) நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக மக்களுக்கான தவெகவின் முழு தேர்தல் அறிக்கையை விஜய் வெளியிட்டார்.

தவெக தேர்தல் அறிக்கையின் 10 முக்கிய அம்சங்கள்

மகளிர் மேம்பாடு

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,500, ஆண்டுக்கு 6 விலையில்லா சிலிண்டர்கள், மணப்பெண்களுக்கு 1 சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை, பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், மாணவர்கள் மற்றும் மகளிர் குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் வட்டியில்லா கடன்.

உலகத்தரக் கல்வி

உறைவிட வசதியுடன் 100 காமராஜர் சிறப்புப் பள்ளிகள், ரூ.20 லட்சம் வரை உயர்கல்விக் கடன், நவீன கட்டமைப்புடன் அரசுப் பள்ளிகள், ஏஐ மூலம் கட்டணமில்லா போட்டித் தேர்வு பயிற்சிகள்.

சுகாதாரமான தமிழ்நாடு

குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு, நவீன கட்டமைப்புடன் கூடிய மருத்துவமனை, ஆண்டுதோறும் கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை, போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு.

சமூகப் பாதுகாப்பு

முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம், 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு. நீண்டகாலம் பட்டா இல்லாதவர்களுக்குப் பட்டா.

அரசு ஊழியர் நலன்

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனை, ஐந்தாண்டு பணியிலுள்ள ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம், அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.18,000, சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.10,000 ஊதியம், பணி ஓய்வின் போது ரூ.15 லட்சம்.

இளைஞர் முன்னேற்றம்

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வரை உதவித்தொகை, ஊதியத்துடன் கூடிய 5 லட்சம் இன்டர்ன்ஷிப், 5 லட்சம் புதிய அரசு வேலைவாய்ப்புகள், தொழில் தொடங்க ரூ. 25 லட்சம் கடன், அரசுத் தேர்வுகளுக்குக் கால அட்டவணை.

விவசாயிகள் நலன்

நிலமுடைய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 முதலீட்டு உதவி, பயிர்க் கடன்கள் தள்ளுபடி, MSP: நெல் குவிண்டால் ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.4,500, 5 லட்சம் சோலார் பம்புகள், தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000; 100% பயிர்க் காப்பீடு.

மீனவர் நலன்

தடைக்கால நிவாரணம் ரூ.27,000, மீன்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, ரூ.25 லட்சம் விபத்துக் காப்பீடு, மீனவர்களுக்கு நிரந்தர வீடு.

தமிழ்நாடு வளர்ச்சி

2036-க்குள் ரூ.15 டிரில்லியன் பொருளாதாரம், ஏஐ அமைச்சகம், ஏஐ பல்கலைக்கழகம், ஏஐநகரம், MSME-களுக்கு ரூ.15,000 கோடி ஆதரவு, மாவட்ட வாரியாக ’மாஸ்டர் பிளான்’: தமிழ்நாட்டில் முதலீடு செய்பவர்களுக்கு 21 நாட்களுக்குள் வணிக உரிமம்.

நல்லாட்சி

லஞ்சமில்லா நிர்வாகத்துடன் அரசுச் சேவைகள் அனைத்தும் வீட்டு வாசலில், காலக்கெடுவுடன் கூடிய அரசு சேவைகள், நிதி ஒதுக்கீட்டில் 10% திட்டங்களை மக்களே தீர்மானிக்கும் அதிகாரம். சட்டமன்றத்தில் மக்கள் முறையீட்டுக்காக ஒருநாள்.

Summary

The leader of the Tamilaga Vettri Kazhagam, Vijay, released the party's full election manifesto today (April 16) and read out 10 key highlights.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.