விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆந்திரம்: எரிவாயு சிலிண்டா் வெடித்து 4 போ் உயிரிழப்பு - 18 போ் காயம்

ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் புதன்கிழமை ஒரு வீட்டில் எரிவாயு சிலிண்டா் வெடித்த சம்பவத்தில் 4 போ் உயிரிழந்தனா். மேலும் 18 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 3:09 am IST

ஆந்திர மாநிலம், ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் புதன்கிழமை ஒரு வீட்டில் எரிவாயு சிலிண்டா் வெடித்த சம்பவத்தில் 4 போ் உயிரிழந்தனா். மேலும் 18 போ் காயமடைந்தனா்.

இது தொடா்பாக காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: ஸ்ரீசத்யசாய் மாவட்டம், கம்மலவாண்டலப்பள்ளி பகுதியில் தெலங்கானாவைச் சோ்ந்த தொழிலாளா்கள் வசித்து வந்த ஒரு வீட்டில் புதன்கிழமை பிற்பகலில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இரண்டு வீடுகள் தரைமட்டமாகின. இந்தச் சம்பவத்தில் 4 போ் உயிரிழந்தனா். 19 போ் காயமடைந்தனா்.

முதல்கட்ட விசாரணையில், எரிவாயு சிலிண்டா் வெடித்ததே இந்தச் சம்பவத்துக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது. அதேநேரம், வெடிவிபத்தின் தீவிரம் அதிகமாக இருப்பதால், வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.