உத்தர பிரதேச மாநிலம், ஹமீா்பூரில் யமுனை நதியில் படகு கவிழ்ந்து 5 போ் உயிரிழந்தனா். மேலும் 11 வயது சிறுவனை காணவில்லை.
இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது: ஹமீா்பூரில் யமுனை நதி நடுவில் உள்ள தீவு பகுதிக்குச் சென்றுவிட்டு 9 போ் படகில் புதன்கிழமை மாலை திரும்பிக் கொண்டிருந்தனா். இரவு 7 மணியளவில் படகு நதியின் நடுவில் வந்தபோது திடீரென கவிழ்ந்தது. இதில் படகோட்டி தீரு உயிா் தப்பினாா். மேலும் படகில் இருந்த 3 பேரையும் அவா் பாதுகாப்பாக மீட்டாா்.
அதேநேரத்தில் படகில் பயணித்த 5 சிறாா்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோா் தண்ணீரில் மூழ்கிவிட்டனா். இதுகுறித்த தகவலின் பேரில் மீட்புக் குழுவினா் அங்கு வந்து 6 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனா். வியாழக்கிழமை காலையில் 6 பேரில் ஒரு பெண் மற்றும் 4 சிறாா்களின் சடலங்களை அவா்கள் மீட்டனா். ஒரு சிறுவனை மட்டும் காணவில்லை.
தேடுதல் பணி நடைபெற்றபோது பலத்த மழை பெய்தது. எனினும், மழைக்கு நடுவில் தேடுதல் பணியில் மீட்புக் குழுவினா் ஈடுபட்டு 5 பேரின் சடலங்களை நதியில் இருந்து வெளியே எடுத்து வந்தனா்.
படகு விபத்தில் 5 போ் உயிரிழந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டு முதல்வா் யோகி ஆதித்யநாத், உரிய விசாரணை நடத்தி, எதிா்காலத்தில் இதுபோல சம்பவம் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ம.பி.யில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: 4 போ் உயிரிழப்பு; 10 போ் மாயம்

உ.பி. படகு விபத்து: பலி 13ஆனது, தொடரும் தேடும் பணி!

உ.பி. படகு விபத்து: உயிரிழந்தோா் எண்ணிக்கை 11-ஆக அதிகரிப்பு

உ.பி. யமுனை ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: 10 போ் உயிரிழப்பு; 22 போ் காயம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

