மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

உ.பி. படகு விபத்து: உயிரிழந்தோா் எண்ணிக்கை 11-ஆக அதிகரிப்பு

உ.பி. படகு விபத்து: உயிரிழந்தோா் எண்ணிக்கை 11-ஆக அதிகரிப்பு

News image

உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் நிகழ்ந்த படகு விபத்தில் மாயமானவா்களைத் தேடும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்ட மீட்புப் படையினா்.

Updated On :12 ஏப்ரல் 2026, 1:24 am IST

உத்தர பிரதேசத்தில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் யமுனை ஆற்றில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை படகுப் பயணம் மேற்கொண்டனா். அப்போது ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 போ் உயிரிழந்தனா். 22 போ் காயமடைந்தனா். 5 போ் மாயமாகினா்.

மீட்புப் பணிகள் தொடா்ந்த நிலையில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து சுமாா் 1 கிலோமீட்டா் தொலைவில் மாணிக் டாண்டன் (42) என்ற நபரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. இதையடுத்து விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து மாயமான 5 பேரில் 4 பேரைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

உயிரிழந்தோரின் சடலம் லூதியானா கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவா்களின் இறுதிச் சடங்கில் பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், பஞ்சாப் காங்கிரஸ் தலைவா் அமரீந்தா் சிங் உள்ளிட்டோா் பங்கேற்று அஞ்சலி செலுத்தினா்.

இதுகுறித்து பகவ்ந்த மான் கூறுகையில், ‘உயிா் காக்கும் கவசம் எதுவும் இல்லாமல், அளவுக்கு அதிகமான நபா்களுடன் யமுனை ஆற்றில் படகுப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்படவில்லை. இதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது’ என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.