அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

ரூ.6,550 செலுத்தினால் முத்ரா யோஜனா திட்டத்தில் லட்சக்கணக்கில் கடன்? - மத்திய அரசு மறுப்பு

சமூக ஊடகங்களில் ரூ.6,550 செலுத்தினால் முத்ரா யோஜனா திட்டத்தில் லட்சக்கணக்கில் கடன் என வைரலாகி வரும் தகவல்கள் குறித்து...

News image

ரூ.6,550 செலுத்தினால் முத்ரா யோஜனா திட்டத்தில் லட்சக்கணக்கில் கடன்? - PIB

Updated On :1 மணி நேரம் முன்பு

பிரதமரின் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.6,550 செயலாக்கக் கட்டணம் அல்லது காப்பீட்டுக் கட்டணம் செலுத்தினால் ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படும் என்று சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் தகவல்களை 'போலி' என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

பிரதமரின் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவித்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திடவும், அதிக வேலைவாய்ப்பை உருவாக்கவும் கடனுதவி வழங்கப்படுகிறது. உற்பத்தி, சேவை, சிறு வணிகத் துறைகளுக்கு தேவையான நிதி ஆதாரங்கள் வங்கிகள் மூலம் பெற்றுத் தரப்படுகிறது.

இந்த நிலையில், முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.6,550 செயலாக்கக் கட்டணம் அல்லது காப்பீட்டுக் கட்டணம் செலுத்தினால் ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படும் என்று சமூக ஊடகங்களில் தகவல்கள் வைரலாகி வருகிறது.

மத்திய அரசு மறுப்பு

இதையடுத்து, முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடனுதவி குறித்து சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் 'போலி'யானது என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக, மத்திய பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிரதமரின் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு ரூ. 6,550 செயலாக்கக் கட்டணம் அல்லது காப்பீட்டுக் கட்டணம் செலுத்தினால் ரூ.10 லட்சம் கடனுதவி வழங்கப்படும் என்று சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் 'போலி'யானது என தெரிவித்துள்ளது.

மேலும், முத்ரா திட்ட கடன்களுக்கு முன்பணமோ அல்லது செயலாக்கக் கட்டணம் என எதையும் அரசு தரப்பில் வசூலுக்கப்படுவதில்லை. இந்த திட்டத்திற்கு அரசு எந்தவொரு தனிநபரையோ, முகவர்களையோ, இடைத்தரகர்களையோ நியமிக்கவில்லை.

இந்த நிலையில், முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி இடைத்தரகர்கள் வெளியிடும் கடிதங்கள், தகவல்கள் அனைத்தும் போலியானவை.

குறு நிறுவனங்கள் மேம்பாடு மற்றும் மறுநிதியளிப்பு முகமை (முத்ரா), குறு தொழில்முனைவோருக்கோ அல்லது தனிநபர்களுக்கோ நேரடியாகக் கடன் வழங்குவதில்லை. இது வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு மறுநிதியளிப்பு செய்தும் ஒரு முகமை மட்டுமே என்று தெளிவுபடுத்தியுள்ள பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவு, இத்தகைய தகவல்களை அங்கீகரிக்கப்படட வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொண்டு சரிபார்க்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், இதுபோன்ற மோசடி செய்திகள் மற்றும் போலியான தகவல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும், திட்டத்தின் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதள்கள் மற்றும் தகவல்களுக்கு முத்ரா அதிகாரப்பூர்வ இணையத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

தவறான செய்திகளையும், தகவல்களையும் பரப்புவதன் மூலம் பொதுமக்களின் கருத்துகளை தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப திசைதிருப்பும் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முகநூல், சுட்டுரை (ட்விட்டர்), கட்செவி (வாட்ஸ்ஆப்) போன்ற சமூக ஊடகங்கள் மிகப் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொய்யான செய்திகள் பரப்பப்படுவதற்கு எதிராக எவ்வளவு கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அத்தகைய செயல்களில் ஈடுபடும் அமைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Summary

The Government has refuted claims circulating on social media on granting a loan amount worth 10 Lakh rupees under the Pradhan Mantri Mudra Yojana on payment of a processing fee of six thousand 550 rupees.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.