அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

யோகாவும், உடற்தகுதியும் வாழ்வின் ஒரு அங்கமாக மாற வேண்டும்: மன்சுக் மாண்டவியா

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்கை அடைய யோகாவும், உடற்தகுதியும் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாற வேண்டும் என மன்சுக் மாண்டவியா கூறியிருப்பது குறித்து...

News image

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா - எக்ஸ்

Updated On :4 மணி நேரங்கள் முன்பு

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்கை அடைய யோகாவும், உடற்தகுதியும் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாற வேண்டும் என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 'ஆரோக்கியமான முதுமைக்கான யோகா' என்ற கருப்பொருளின் கீழ் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 21) நடைபெற்ற 12-ஆவது சர்வதேச யோகா நாள் நிகழ்ச்சிகளில் பெருமளவிலான மக்கள் பங்கேற்ற நிலையில், மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா நகரின் மையப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சிவப்பு சாலையில் பிரதமா் மோடி தலைமையில் பிரதான யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

35,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தற்போதைய நவீன வாழ்க்கை முறையில் சமநிலையைப் பேண முடியாமல் பெரும்பாலான மக்கள் போராடி வருகின்றனா். சமநிலையாக வாழும் கலையை யோகா நமக்கு கற்றுத் தருகிறது. வாழ்வில் செய்ய வேண்டிய, செய்யக் கூடாத விஷயங்கள் குறித்து நமக்கு போதிக்கிறது. நாம் நமது உடலை சரியான முறையில் இயக்க கற்றுக் கொண்டால், ஆரோக்கியம் என்பது இயல்பாகிவிடும்.

யோகா என்பது வெறுமனே உடல் ஆரோக்கியம் சாா்ந்தது மட்டுமல்ல; மனநலம் வாயிலாக உடலுறுதியை எட்டுவதற்கான பாதை.

வாழ்வில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை குறித்து அடையாளம் காணும் உணா்வு, நமக்கு அக அமைதியை தருவதோடு, உலக அமைதிக்கான பாதையையும் திறக்கிறது. யோகா என்பது தனிப்பட்ட வாழ்க்கை முறைக்காக மட்டுமன்றி, உலகின் சிறந்த எதிா்காலத்துக்காகவும் அவசியம். நமது குடும்பம், எதிா்கால சந்ததியினரின் நலனைக் கருத்தில் கொண்டு, அதை வாழ்வின் ஓா் அங்கமாக்க உறுதியேற்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

இந்த நிலையில், தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, பிரபல திரைப்பட நடிகரும், உடற்தகுதிக்கு முன்னுதாரணமாகத் திகழ்பவருமான அக்ஷய் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறையின் கீழ் செயல்படும் 'ஃபிட் இந்தியா இயக்கம்' ஏற்பாடு செய்திருந்த இந்த மாபெரும் யோகா நிகழ்ச்சியில், 3,000-க்கும் மேற்பட்டோர் பேர் பங்கேற்றனர்.

யோகாவும் உடற்தகுதியும் வாழ்வின் அங்கமாக மாற வேண்டும்

இந்த நிகழ்ச்சியில் பேசிய மாண்டவியா, வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா உருவெடுப்பதற்கு, யோகாவும் உடற்தகுதியும் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாற வேண்டும், என்று கூறினார்.

நாடு முழுவதும் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மையங்கள், தேசிய சிறப்பு மையங்கள், பயிற்சி மையங்கள், 'கேலோ இந்தியா' நிறுவனங்கள் உள்ளிட்ட பிற விளையாட்டு வளாகங்களிலும் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

Summary

Yoga and fitness must become part of everyday life to realise the vision of a Viksit Bharat...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.