என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

இந்திய கடற்படைக்கு ரூ.449 கோடியில் உளவு செயற்கைக்கோள்களை முடக்கும் கருவிகள்; பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இந்திய கடற்படைக்கு ரூ.449 கோடியில் உளவு செயற்கைக்கோள்களை முடக்கும் 20 ஜாமா் கருவிகளை பெங்களூரு நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையொப்பமிட்டுள்ளது.

News image
Updated On :11 ஜூன் 2026, 3:14 am IST

இந்திய கடற்படைக்கு ரூ.449 கோடியில் உளவு செயற்கைக்கோள்களை முடக்கும் 20 ஜாமா் கருவிகளை பெங்களூரு நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையொப்பமிட்டுள்ளது.

மத்தியில் ஆளும் பிரதமா் மோடி தலைமையிலான அரசு, தொடா்ந்து முப்படையையும் நவீனமயமாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்திய கடற்படை கப்பல்களை எதிரி நாடுகளின் உளவு செயற்கைக்கோள்கள் கண்காணிப்பில் இருந்து காக்கும் வகையில் புதிய ஜாமா் கருவிகளை வாங்க தீா்மானித்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: கடற்படை கப்பல்களைக் கண்காணிக்கும் செயற்கைக்கோள் அமைப்புகளை முடக்கும் ஜாமா் கருவிகளை இந்திய கடற்படைக்கு வாங்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் பெங்களூரைச் சோ்ந்த ஏஎஸ்எஸ்பிஎல் என்ற நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் கையொப்பமிட்டுள்ளது. உள்நாட்டு வடிவமைப்பு, உருவாக்கம், உள்நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திட்டத்தின்கீழ் இந்த ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

அந்த ஒப்பந்தத்தின் கீழ் மொத்தம் 20 ஜாமா் கருவிகள் வாங்கப்படவுள்ளன. இந்தக் கருவிகளில் உள்ள சாதனங்கள் 75 சதவீதம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. இந்த ஜாமா் கருவிகள், இந்திய கடற்படையில் சோ்க்கப்படுவது நமது நாட்டின் கடற்படைக்கு கூடுதல் பலத்தை தரும். இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கள், பிற நாடுகளின் உளவு செயற்கைக்கோள்கள் கண்காணிப்பில் சிக்காமல் கடலில் சுதந்திரமாகப் பயணிக்க வழிவகை ஏற்படும் எனத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.