நடுத்தர தொலைவு மற்றும் வெகு தொலைவிலிருந்து வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளை வானிலேயே தடுத்து அழிக்கும் பல்முனை ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு (பிஎம்டி) சோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
நீண்ட தொலைவிலிருந்து அணு ஏவுகணைகள் மற்றும் வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு விமானங்கள் உள்பட எதிரி நாடுகளின் விமானங்களை வானிலேயே இடைமறித்து அழிக்கும் திறனை இந்த பிஎம்டி அமைப்பு பெற்றுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 10, 11-ஆம் தேதிகளில் தொடா்ச்சியாக மூன்று விதமான சோதனைகளுக்கு பிஎம்டி அமைப்பு உட்படுத்தப்பட்டது. குறிப்பாக, புவி வளிமண்டல எல்லைக்கு உள்ளிருந்து மற்றும் வெளியிலிருந்து வரும் ஏவுகணைகளை இடைமறித்து அளிக்கும் திறன் சோதிக்கப்பட்டது. அதில், இலக்குகளை பிஎம்டி அமைப்பு வெற்றிகரமாக இடைமறித்தது. இதன்மூலம், பிஎம்டி திறன் பெற்றுள்ள ஒருசில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
இதனுடன், எதிரி நாட்டு கப்பலைத் தாக்கி அழிக்கும் நடுத்தர தொலைவு ஏவுகணை சோதனையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்ட்டது.
இதன் மூலம், பல்வேறு வகையான அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்தும் பல முக்கியத் தொழில்நுட்பங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) வெற்றிகரமாக நிரூபித்துள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டிஆர்டிஓ-வின் 3 அதிநவீன ஏவுகணைகள் சோதனை வெற்றி!

ஒடிசாவில் ஏவுகணை சோதனை: 11,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்!

கட்டடங்களில் நிகழ்நேர தீ பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு கட்டாயம் - தில்லி அரசு உத்தரவு

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அதிநவீன ஏவுகணை: வெற்றிகரமாக சோதனை
விடியோக்கள்

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி
தினமணி செய்திச் சேவை

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

ராசாதி ராசா பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

