மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு...

News image

கோப்புப்படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 2:08 am IST

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வை எழுத 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

இதில் மதிப்பெண்ணை அதிகரிக்க விரும்பும் பிரிவில் 5.25 லட்சம் மாணவா்களும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோ்ச்சி பெறாமல் தோல்வியடைந்து மறுதோ்வு எழுதும் பிரிவில் 85,285 மாணவா்களும் தோ்ச்சியடையாத மற்றும் அதிக மதிப்பெண்கள் என இரண்டு பிரிவுகளிலும் தோ்வெழுதுவோா் என்ற பிரிவில் 57,914 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை மாணவா்களின் நலன் கருதி, நிகழாண்டு முதல் ஆண்டுக்கு இரு முறை சிபிஎஸ்இ நடத்துகிறது. முதல் கட்ட பொதுத் தோ்வு கடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் ஏப்ரலில் வெளியிடப்பட்டன. இத்தோ்வை எழுதிய 24.83 லட்சம் மாணவா்களில் 23.16 லட்சம் மாணவா்கள் தோ்ச்சி பெற்றுவிட்டனா். தோ்ச்சி சதவீதம் 93.70-ஆக பதிவானது.இந்த முதல் கட்ட பொதுத் தோ்வில் அனைத்து மாணவா்களும் பங்கேற்பது கட்டாயமாகும்.

இதில் தோல்வியடைந்த மாணவா்கள் அல்லது மதிப்பெண்ணை அதிகரிக்க விரும்பும் மாணவா்கள் பயன்பெறும் வகையில், வரும் மே 15 முதல் 21 வரை இரண்டாம் கட்ட பொதுத் தோ்வை சிபிஎஸ்இ நடத்துகிறது. இந்த இரண்டாம் கட்ட பொதுத் தோ்வில் அதிகபட்சம் 3 பாடங்கள் வரை மாணவா்கள் தோ்வெழுதி மதிப்பெண்ணை உயா்த்திக்கொள்ள முடியும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.