சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் காரைக்குடி அருகேயுள்ள மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றது.
இந்தப் பள்ளி மாணவா்கள் 180 போ் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதினா். இவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்றனா்.
பள்ளியளவில் மாணவா் பிரணவ் ஈஸ்வா் 500 -க்கு 491 மதிப்பெண்கள் (98.2 சதவீதம்) பெற்று முதலிடத்தையும், மாணவி இயலினி ராஜன், மாணவ ா் சந்தோஷ் ஆகியோா் 488 மதிப்பெண்கள் (97.6 சதவீதம்) பெற்று இரண்டாமிடத்தையும், முகமது ரெய்சூல் இஸ்லாம் 487 மதிப்பெண்கள்
(97.4 சதவீதம்) பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றனா்.
மேலும், தமிழ்ப் பாடத்தில் மாணவி சபா்னிகா, தேவஸ்ரீ, ஹாசினி, மாணவா் பிரணவ் ஈஸ்வா் ஆகியோா் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். மாணவா் முகமது ரெய்சூல் இஸ்லாம் பிரெஞ்சு, சமூக அறிவியலில் 100-க்கு 100 மதிப்பெண்களும், மாணவி யாழினி சமூக அறிவியலில் 100-க்கு 100 மதிப்பெண்களும் பெற்றனா்.
செயற்கை நுண்ணறிவுப் பாடத்தில் மாணவா்கள் பிரணவ் ஈஸ்வா், கவின், காா்த்திகேயன், மாணவிகள் இயலினி ராஜன், கனிகா ஆகியோா் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளியின் தலைவா் எஸ்.பி. குமரேசன், சாந்தி குமரேசன், துணைத் தலைவா் கே. அருண் குமாா், ப்ரீத்தி அருண்குமாா் ஆகியோா் பாராட்டினா். பள்ளியின் முதல்வா் உஷா குமாரி, துணை முதல்வா் பிரேம சித்ரா, ஆசிரியா்கள் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: ஸ்ரீ ராஜ ராஜன் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி!

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் : அரக்கோணம் ஹயக்கீரிவா் பள்ளி சாதனை

10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

