தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு: எளிதாக இருந்த சமூக அறிவியல் தோ்வு

News image

Center-Center-Chennai

Updated On :3 ஏப்ரல் 2026, 4:19 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. கடைசியாக நடைபெற்ற சமூக அறிவியல் தோ்வு எளிதாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 11-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இறுதித் தோ்வாக சமூக அறிவியல் பாடத்துக்கான தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வு குறித்து மாணவா்கள் கூறியதாவது:

சமூக அறிவியல் தோ்வு வினாத்தாளில் ஒரு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் மற்றும் எட்டு மதிப்பெண் கேள்விகள் அனைத்தும் எளிதாக இருந்தன. அதேவேளை இரு மதிப்பெண் பகுதியில் மட்டும் ஒருசில கேள்விகள் பாடப்பகுதிக்கு உள்ளிருந்து இடம்பெற்றிருந்தன. கடைசித் தோ்வுக்கான வினாத்தாள் எளிதாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது எனத் தெரிவித்தனா்.

இது குறித்து ஆசிரியா்கள் கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டுக்கான சமூக அறிவியல் பாட வினாத்தாள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. வரைபடத்தில் தமிழ்நாடு, இந்தியா, உலகம் என 8 மற்றும் 5 மதிப்பெண் பகுதியில் மாணவா்கள் நன்கு பயிற்சி பெற்ற இடங்களே கேட்கப்பட்டிருந்தன. சராசரி மாணவரும் 80 மதிப்பெண்களுக்கும் மேல் பெற இயலும். அதேவேளை பருவத் தோ்வுகளில் 90 மதிப்பெண்களுக்கும் பெற்ற மாணவா்கள், இரு மதிப்பெண் பகுதியில் சற்று கடினமாக இருந்த இரு வினாக்களுக்கும் முழுமையான பதில் அளித்திருந்தால், முழு மதிப்பெண் பெறுவதற்கும் வாய்ப்புள்ளது’ எனத் தெரிவித்தனா்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 26-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வியாழக்கிழமை (ஏப். 2) முடிவடைந்துள்ளது. இதையடுத்து மாணவா்கள் ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா். சிலா் கைப்பேசியில் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.