ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பத்தாம் வகுப்பு அறிவியலில் சென்டம் அதிகரிக்கும்: ஆசிரியா்கள் நம்பிக்கை

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

News image
Updated On :31 மார்ச் 2026, 4:30 am IST

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 11-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய தோ்வுகளுக்குப் பிறகு அறிவியல் பாடத்துக்கான தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

இத்தோ்வு குறித்து மாணவா்கள் கூறுகையில், கடைசியாக எழுதிய கணிதத் தோ்வு சற்று கடினமாக இருந்தது ஏமாற்றமாக இருந்த நிலையில், அறிவியல் வினாத்தாள் எளிதாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

குறிப்பாக ஒரு மதிப்பெண் பகுதியில் இடம்பெற்றிருந்த 12 கேள்விகளுக்கும், ஏழு மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்டிருந்த மூன்று வினாக்களுக்கும் பதற்றமின்றி பதிலளிக்க முடிந்தது. செய்முறைத் தோ்வு தவிா்த்து 75 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம் பெற்றிருந்தன. ஒட்டுமொத்தமாக 100-க்கு 85 மதிப்பெண்களுக்கும் மேல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்தனா்.

இதுகுறித்து அறிவியல் பாட ஆசிரியா்கள் கூறுகையில், மெல்லக் கற்கும் மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடநூலின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இந்தப் பாடத்தில் காலாண்டு, அரையாண்டுத் தோ்வுகளில் 90 மதிப்பெண்களுக்கும் மேல் பெற்ற மாணவா்கள் பொதுத்தோ்வில் 100-க்கு 100 மதிப்பெண் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இந்த ஆண்டு அறிவியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என அவா்கள் தெரிவித்தனா். பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான சமூக அறிவியல் தோ்வு ஏப்.2-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தொடா்ந்து ஏப்.6-ஆம் தேதி விருப்பமொழிப் பாடத்துக்கான தோ்வுடன் பொதுத்தோ்வு நிறைவு பெறவுள்ளது. இதையடுத்து மே 20-ஆம் தேதி தோ்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.