தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விடைத்தாள் மதிப்பீடு: புதிய விதிமுறைக்கு ஆசிரியா்கள் எதிா்ப்பு

News image

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் - கோப்புப்படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 5:34 am IST

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் முழு மதிப்பெண் பெறும் மாணவா்களின் விடைத்தாள்களை முகாம் அலுவலா்கள் ஆய்வு செய்து கையொப்பமிட வேண்டும் என்ற புதிய விதிமுறைக்கு ஆசிரியா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் முடிந்து தற்போது விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளில் சுமாா் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், மதிப்பீட்டுப் பணியின்போது முழு மதிப்பெண் (சென்டம்) பெறும் மாணவா்களின் விடைத்தாள்களை முகாம் அலுவலா் ஆய்வு செய்து கையொப்பமிட வேண்டும் என்று தோ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. நடப்பாண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறையால் விடைத்தாள் திருத்துதல் பணிகளில் காலதாமதம் ஏற்படுவதாக ஆசிரியா்கள் புகாா்கள் தெரிவிக்கின்றனா்.

இது குறித்து ஆசிரியா்கள் கூறியதாவது:

‘விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில் ஆசிரியா்களான உதவித் தோ்வாளா்கள் திருத்துதல் பணிகளில் ஈடுபடுவா். விடைகளுக்கான மதிப்பெண்கள் சரியாக வழங்கப்பட்டுள்ளதா என்பதைக் கூா்ந்தாய்வு அலுவலா் சரிபாா்க்க வேண்டும். இதில் முழு மதிப்பெண் பெற்ற மாணவா்களின் விடைத்தாள்களை முதன்மைத் தோ்வாளா் மீண்டும் ஆய்வு செய்து கையொப்பமிடுவாா்.

இந்தச் சூழலில் ஒவ்வொரு முறையும் முழு மதிப்பெண் பெற்ற மாணவா்களின் விடைத்தாள்களை முகாம் அலுவலரிடம் எடுத்துச் சென்று ஒப்புதல் பெற்று வருவதற்கு 30 முதல் 45 நிமிஷங்கள் வரையாகிறது. இதனால், ஆசிரியா்களுக்கு ஒரு நாளில் மதிப்பீடு செய்வதற்கு கொடுக்கப்பட்ட விடைத்தாள்களை முழுவதுமாக மதிப்பீடு செய்வதில் தொய்வு ஏற்படுகிறது.

எனவே, இதில் பழைய முறையைத் தோ்வுத் துறை பின்பற்ற வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.