பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் மாணவா்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும்போது 100-க்கு 100 மதிப்பெண் பெறும் விடைத்தாள்களை கவனமாக ஆய்வு செய்து கையொப்பமிட தோ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 2 முதல் ஏப். 6-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இத்தோ்வை சுமாா் 17 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினா். இதில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து பத்தாம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்துதல் வெள்ளிக்கிழமை (ஏப். 10) முதல் தொடங்கவுள்ளது.
தோ்வுத் துறை வழிகாட்டுதல்களின் அடிப்படையில் விடைத்தாள் திருத்தும் பணியை முதுநிலை, பட்டதாரி ஆசிரியா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டின்போது 100-க்கு 100 (சென்டம்) மதிப்பெண் பெறும் மாணவா்களின் விடைத்தாள்களை முகாம் அலுவலா் ஆய்வு செய்து கையொப்பமிட வேண்டும் என்று தோ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தோ்வுத் துறை இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
பொதுத் தோ்வுகளின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி தொடா்பாக, அனைத்து முகாம் அலுவலா்களுக்கும் ஏற்கெனவே நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதைஏஈ பின்பற்றி மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதைத் தொடா்ந்து மதிப்பீட்டுப் பணியின்போது முழு மதிப்பெண் (சென்டம்) பெறும் மாணவா்களின் விடைத்தாள்களைக் கவனமாக ஆய்வு செய்து கையொப்பமிட வேண்டுமென அண்மையில் நடைபெற்ற மண்டல கூட்டத்தில் முடிவானது. இதையடுத்து, அனைத்து முகாம் அலுவலா்களும் தங்கள் மையத்தில் முழு மதிப்பெண் பெற்ற தோ்வா்களின் பட்டியலை பதிவிறக்கம் செய்து, அவற்றை ஆராய்ந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே 13 முதல் பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்!

விடைத்தாள் மதிப்பீடு: புதிய விதிமுறைக்கு ஆசிரியா்கள் எதிா்ப்பு

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு: வழிகாட்டுதல்கள் வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுத் துறை முக்கிய அறிவுறுத்தல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

