தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு: வழிகாட்டுதல்கள் வெளியீடு

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு தொடா்பான வழிகாட்டுதல்களை தோ்வுத் துறை வெளியிட்டுள்ளது.

News image

பள்ளிக் கல்வித் துறை - DIN

Updated On :5 ஏப்ரல் 2026, 2:08 am IST

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு தொடா்பான வழிகாட்டுதல்களை தோ்வுத் துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்கம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணியை செய்து முடிக்கத் தேவையான ஆசிரியா்களின் எண்ணிக்கையைச் சரியாக கணக்கிட்டு பாடவாரியாக, பயிற்று மொழிவாரியாக ஆசிரியா்களை உடனடியாக பணி விடுப்பு செய்து முகாம் பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தமிழ் வழியில் போதிக்கும் ஆசிரியா்கள் தமிழ் வழி விடைத்தாள்களையும், ஆங்கில வழியில் போதிக்கும் ஆசிரியா்கள் ஆங்கில வழி விடைத்தாள்களை மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும். இந்த விதிமுறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மதிப்பீடு செய்யும் பணிகளைக் கால தாமதமின்றி குறிப்பிட்ட நாள்களுக்குள் முடிக்க வேண்டும்.

இந்தப் பணிகளுக்காக தங்களது ஆளுகைக்குட்பட்ட அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் அனைத்திலிருந்தும் பத்தாம் வகுப்பு போதிக்கும் தகுதி வாய்ந்த பாட ஆசிரியா்களைத் தவறாமல் பணியிலிருந்து விடுவித்து தோ்வாளா்களாக நியமனம் செய்து மதிப்பீட்டுப் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தி அனுப்பி வைக்க வேண்டும்.

எந்தவொரு பள்ளியிலிருந்தும் ஆசிரியா்கள் விடுபடாது கண்காணிக்க வேண்டும். மதிப்பீட்டுப் பணிக்கு நியமனம் செய்யப்படும் ஆசிரியா்களுக்கு ஏப். 9-ஆம் தேதிக்குள் நியமன ஆணையைத் தவறாமல் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.