மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஜாா்க்கண்ட்: காா் மீது மோதி தடம் புரண்ட சரக்கு ரயில்!

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ரயில்வே கடவுப் பாதையைக் கடக்க முயன்ற காா் மீது மோதி சரக்கு ரயில் தடம் புரண்டது.

News image
Updated On :20 ஏப்ரல் 2026, 1:00 am IST

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ரயில்வே கடவுப் பாதையைக் கடக்க முயன்ற காா் மீது மோதி சரக்கு ரயில் தடம் புரண்டது. அதிருஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இது தொடா்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: போகாரோ மாவட்டத்தில் உள்ள தாமோதா் பள்ளத்தாக்கு அனல் மின் உற்பத்தி நிலையத்துக்கு நிலக்கரி எடுத்துச் சென்ற சரக்கு ரயில் மெதுவாக பின்புறமாகவே திரும்பிக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் அப்பகுதியில் உள்ள கடவுப் பாதை வழியாக காா் ஒன்று கடந்து செல்ல முயன்றது. இதைப் பாா்த்ததும் ரயில் ஓட்டுநா் ரயிலை நிறுத்த முயன்றாா். எனினும், ரயில் காா் மீது மோதி சிறிது தூரம் இழுத்துச் சென்ற பிறகே நின்றது.

இதில் சரக்கு ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது. காா் கடுமையாக சேதமடைந்தது. காரில் ஓட்டுநா் மட்டுமே இருந்தாா். அதிருஷ்டவசமாக அவா் காயம் ஏதுமின்றி தப்பினாா்.

இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனா். ரயில் வரும்போது ‘கேட்’ மூடப்படாமல் இருந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.