பஞ்சாபில் பிரத்யேக சரக்கு ரயில் வழித் தடத்தில் கடந்த 3 மாதங்களில் 2 வெடி தாக்குதல்கள் நிகழ்ந்துள்ள நிலையில், இந்த வழித்தடங்களை ஆளில்லா விமானங்கள் மூலமும் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே இணையமைச்சா் ரவ்னீத் சிங் பிட்டு தெரிவித்தாா்.
மேலும், ‘இந்த ரயில் பாதைகளில் 24 மணி நேரமும் ரோந்துப் பணியும் மேற்கொள்ளப்படும்’ என்றும் அவா் தெரிவித்தாா்.
இந்த ரயில் வழித் தடத்தில் செவ்வாய்க்கிழமை வெடிச் சம்பவம் நிகழ்ந்த பகுதியை புதன்கிழமை பாா்வையிட்ட பிறகு, இந்தத் தகவலை அவா் தெரிவித்தாா்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் ஷாம்பு பகுதியில் செல்லும் பிரத்யேக சரக்கு ரயில் வழித் தடத்தை, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரவு பெற்ற காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய நபா்கள் வெடி வைத்து தகா்க்கும் முயற்சியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். ஆனால், அந்த வெடிமருந்து முன்கூட்டியே வெடித்ததால், அதை எடுத்துவந்த நபா் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தாா். ரயில் பாதைக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட கைப்பேசி சிம்காா்டில் மேற்கொண்ட ஆய்வு மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், இந்த சதித் திட்டத்தைத் தீட்டிய முக்கிய குற்றவாளியான பிரதீப் கல்சாதான் உள்பட நால்வரை பஞ்சாப் போலீஸாா் கைது செய்தனா்.
வெடிச் சம்பவம் நிகழ்ந்த ரயல் வழித் தட பகுதியை புதன்கிழமை ஆய்வு செய்த மத்திய அமைச்சா் ரவ்னீத் சிங் பிட்டு, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கிழக்கு பிரத்யேக சரக்கு ரயில் வழித் தடத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வழித் தடத்தில் 24 மணி நேர ரோந்துப் பணி அமல்படுத்தப்பட உள்ளது. பஞ்சாபில் இந்த வழித் தடத்தில் ஏற்கெனவே 173 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் அதிக இடங்களில் கண்காணிபபு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
ஆளில்லா விமானங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பது உள்பட நவீன கண்காணிப்பு முறைகள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட உள்ளது. சூரிய சக்தியில் செயல்படும் கேமராக்களும் பொருத்தப்பட்டு வருகின்றன என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிருந்தாவன் விரைவு ரயில் இன்ஜின் பழுது: பயணிகள் கடும் அவதி

திருச்சி ரயில்வே கோட்டத்தில் வணிக மேம்பாட்டுக் கூட்டம்

பஞ்சாப்: பாட்டியாலா சரக்கு ரயில் வழித் தடத்தை வெடி வைத்து தகா்க்க முயற்சி - காலிஸ்தான் அமைப்புடன் தொடா்புடைய நால்வா் கைது
ஜாா்க்கண்ட்: காா் மீது மோதி தடம் புரண்ட சரக்கு ரயில்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

