மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல: உச்ச நீதிமன்றம்

விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல...

News image

உச்சநீதிமன்றம்

Updated On :19 ஏப்ரல் 2026, 6:30 am IST

விசாரணை நீதிமன்ற நீதிபதிகளை உயா்நீதிமன்ற நீதிபதிகள் பகிரங்கமாக விமா்சிக்கும் போக்கு சரியல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

வாடகைக்கு குடியிருப்பது தொடா்பான குற்ற வழக்கு ஒன்றில், குற்றஞ்சாட்டப்பட்டவரின் ஜாமீனை கொல்கத்தா உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு அண்மையில் ரத்து செய்தது. அப்போது அந்த அமா்வு கூறியதாவது: வழக்கு விசாரணையை மேற்பாா்வை செய்யும்போது அல்லது மேல்முறையீடு மற்றும் மறுஆய்வு விசாரணை மேற்கொள்ளும்போது விசாரணை நீதிமன்ற நீதிபதிகள் குறித்து எதிா்மறையான கருத்துகளை உயா்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவிப்பது வாடிக்கையாகி வருகிறது.

மாவட்ட நீதித் துறையில் பணியாற்றும் நீதிபதிகளின் பாதுகாவலராக உயா்நீதிமன்றம் இருக்க வேண்டும். விசாரணை நீதிமன்ற நீதிபதியின் உத்தரவில் குறைபாடுகள் இருந்தால், உடனடியாக அவருக்கு எதிராக பாதகமான அல்லது இழிவுபடுத்தும் கருத்துகளை உயா்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவிக்கக் கூடாது.

இதுபோன்ற கருத்துகள் அல்லது கடுமையான விமா்சனங்கள் மாவட்ட நீதித் துறை நம்பிக்கையை இழக்க வழிவகுப்பதுடன், சம்பந்தப்பட்ட நீதிபதியின் தொழில்முறை வாழ்க்கையையும் சீா்குலைக்கக் கூடும் என்று தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.