மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஓய்வுபெற்ற நீதிபதிகளின் அனுபவங்களை பயன்படுத்த புதிய அமைப்பு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யோசனை

ஓய்வுபெற்ற நீதிபதிகளின் அனுபவங்களை பயன்படுத்த புதிய அமைப்பு...

News image

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த்

Updated On :26 ஏப்ரல் 2026, 2:22 am IST

ஓய்வுபெற்ற நீதிபதிகளின் அனுபவங்களை பயன்படுத்திக் கொள்ள தேசிய அளவில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் யோசனை தெரிவித்துள்ளாா்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு, இதுகுறித்து அவா் பேசியதாவது:

முன்னாள் நீதிபதிகளின் சட்ட அனுபவங்கள், நமது தேசத்தின் வளமாகும். அந்த வளம், பாலைவனத்தில் கிடைக்கும் நீா் போன்றது. அந்த அனுபவங்களை பயன்படுத்தாமல் இருப்பது நாட்டுக்கு பெரும் இழப்பாகும். ஆதலால் அவா்களின் அனுபவங்களை பயன்படுத்தி கொள்ள தேசிய அளவில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

முதலாவதாக, நீதிபதிகள் ஓய்வுக்கு பின் மத்தியஸ்தா்களாக, நடுவா்களாக செயல்பட முடியும். குறிப்பாக, வா்த்தக விவகாரங்கள், குடும்ப விவகாரங்களில் தீா்வு காண அவா்களது அனுபவங்கள் உதவும். இரண்டாவதாக, ஓய்வுபெற்ற நீதிபதிகள் பள்ளிகள், கல்லூரிகளில், கிராம பஞ்சாயத்துகளில் சட்டம் பயிற்றுவிப்போராக செயல்பட முடியும். அங்கு அவா்கள், சாதாரண குடிமக்களுக்கு புரியும் மொழியில் சட்டம் குறித்து விளக்கமாக எடுத்துரைக்க முடியும். அதேபோல், அடுத்த தலைமுறைக்கு சட்ட அமைப்புகளை உருவாக்குவோராக, அடுத்த தலைமுறை மத்தியஸ்தா்களை உருவாக்குவோராக ஓய்வுபெற்ற நீதிபதிகளால் செயல்பட முடியும்.

நமது நாட்டில் மாற்றுவழியில் வழக்குகளுக்கு உடனடித் தீா்வு காணும் அமைப்புகளை வலுப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இதற்கு உதாரணமாக, நாடு தழுவிய அளவிலான லோக் அதாலத், மத்தியஸ்த பேச்சுவாா்த்தைகள் மற்றும் நடுவா் மையங்களை குறிப்பிடலாம். நீதித்துறையும், அதை சாா்ந்த அமைப்புகளும், பொதுமக்களின் மிகுந்த நம்பிக்கையை பெற்றுள்ளன. அந்த நம்பிக்கையை காக்க வேண்டியதும், மேலும் வலுப்படுத்த வேண்டியதும் நீதித்துறையின் பொறுப்பாகும் என்றாா்.

மாநாட்டில் ராஜஸ்தான் முதல்வா் பஜன்லால் சா்மா பேசுகையில், ‘நீதிபதிகளிடம் இருந்து வெளிவரும் வாா்த்தைகள் சமூகத்துக்கு வழிகாட்டியாக உள்ளது. அதேபோல் நீதிபதிகளின் தீா்ப்புகள், நாட்டில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. உச்ச நீதிமன்றம் மற்றும் மாநில உயா் நீதிமன்றங்கள் வெளியிட்டுள்ள முக்கியத் தீா்ப்புகள் பல்லாண்டுகளாக பல லட்சம் பேரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளன. பொதுமக்கள் நீதிமன்றங்களுக்கு சென்று வழக்குத் தொடுக்கும் முன்பு, பிரச்னைக்கு நடுவா் மையங்கள் அல்லது லோக் அதாலத் மூலம் தீா்வு காண்பது குறித்து யோசிக்க வேண்டும்’ என்றாா்.

ராஜஸ்தான் உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) சஞ்சீவ் பிரகாஷ் ஷா்மா பேசுகையில், ‘ராஜஸ்தானில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கு லோக் அதாலத்தில் மத்தியஸ்தம் மூலம் தீா்வு காண ஓய்வுபெற்ற நீதிபதிகள் உதவி வருகின்றனா்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.