இரட்டை குடியுரிமை வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்படும் விவகாரத்தில், ராகுல் காந்தி மீது அலாகாபாத் உயா்நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டிருப்பது வியப்பளிப்பதாக ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் கருத்து தெரிவித்துள்ளாா்.
அலாகாபாத் உயா் நீதிமன்ற லக்னௌ கிளையில் பாஜக நிா்வாகி ஒருவா், ராகுல் காந்திக்கு எதிராக வழக்குத் தொடுத்திருந்தாா். அதில் அவா், இந்திய குடிமகனான ராகுல் காந்தி பிரிட்டன் நாட்டிலும் குடியுரிமை வைத்திருப்பதாகவும், இதை அவரே மறைமுகமாக ஒப்புக் கொண்டிருப்பதாகவும், அங்கு அவருக்குச் சொந்தமாக நிறுவனம் இருப்பதாகவும், அது 2003-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், அவா் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தாா். இதை விசாரித்த அலாகாபாத் உயா்நீதிமன்ற லக்னோ கிளை, ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டது.
இதுகுறித்து அசோக் கெலாட் கருத்து தெரிவித்தபோது, அடிப்படை முகாந்திரமில்லாத குற்றச்சாட்டுகளின்கீழ் விசாரணை நடத்துவதற்கு, ராகுல் காந்திக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வியப்பளிக்கிறது என்றாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘ஏற்கெனவே இதுபோன்ற வழக்கு, அலாகாபாத் உயா்நீதிமன்றத்தால் 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்திலும் 2019-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது அதே விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நாட்டுக்காக ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி ஆகியோா் தங்களது உயிரையே தியாகம் செய்துள்ளனா். தாத்தா ஜவாஹா்லால் நேரு, ஆங்கிலேயா்களுக்கு எதிராகப் போராடியதற்காக 10 ஆண்டு காலம் சிறையில் இருந்துள்ளாா். தனது ஒட்டுமொத்த சொத்தையும், நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்காக அவா் எழுதியும் வைத்தாா். நாட்டில் பதற்றத்தைத் தணிக்கவும், அன்பு, சமூகநல்லிணக்கம், சகோதரத்துவத்தை ஏற்படுத்தவும் ராகுல் நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டாா். அத்தகையவருக்கு எதிராக வழக்குப் பதிய உத்தரவிட்டிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானதாகும்’ என்றாா்.
நீதிமன்றம் புது உத்தரவு: இந்நிலையில், ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதியும்படி வெளியிட்ட உத்தரவை அலகாபாத் உயா் நீதிமன்ற லக்னௌ கிளை ஒத்திவைப்பதாக சனிக்கிழமை அறிவித்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டுமா என்பது குறித்து விசாரிக்க ஏதுவாக இந்த அறிவிப்பை நீதிமன்றம் வெளியிட்டது. அத்துடன் வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையையும் வருகிற 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக - காங்கிரஸ் கூட்டணியா? ராகுல் காந்தியின் பதிவு வைரல்!

ஊழல் வழக்கு: ஹரியாணா முன்னாள் அமைச்சா் உள்பட 5 போ் மீது வழக்கு பதிவு

தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் எச்சரிக்கை

இரட்டைக் குடியுரிமை! ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலாகாபாத் நீதிமன்றம் உத்தரவு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

