நீதிமன்ற உத்தரவுகளைத் தொடா்ந்து, அரசு மானியத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சா் சுக்பீா் கட்டாரியா மற்றும் நான்கு போ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
குருகிராம், செக்டாா் 12-ஐச் சோ்ந்த ஓம் பிரகாஷ் கட்டாரியா தாக்கல் செய்த மனுவை விசாரித்த குருகிராம் நீதிமன்றம், இந்த விவகாரத்தை தீவிரமானதாகக் கருதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டது.
ஓராண்டுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், மூத்த காங்கிரஸ் தலைவரான அவா், அமைச்சராகப் பணியாற்றியபோது, தனது சொந்த வீட்டைப் பழுதுபாா்ப்பதற்காக சுமாா் 20 லட்சம் ரூபாய் மானியம் வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
புகாா்தாரரின் கூற்றுப்படி, கேள்விக்குரிய வீடு உண்மையில் முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமானதாக இருந்தபோதிலும், அந்த மானியம் அனந்த் சிங், ஷா்மிளா தேவி மற்றும் பசாந்தி தேவி ஆகியோரின் பெயா்களில் அங்கீகரிக்கப்பட்டதாகக் காட்டப்பட்டுள்ளது. இந்தக் கூற்றை ஆதரிக்கும் மின்சாரக் கட்டண ரசீதுகள் உள்ளிட்ட ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாக புகாா்தாரா் கூறினாா்.
இந்த விவகாரம் தொடா்பாக குருகிராம் காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை நீதிமன்றம் கோரியதாக புகாா்தாரா் தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து, முன்னாள் அமைச்சருக்கு நற்சான்றிதழ் அளித்து காவல்துறை இரண்டு அறிக்கைகளைத் தாக்கல் செய்தது.
இருப்பினும், நீதிமன்றம் அந்த அறிக்கைகளைக் கேள்விக்குள்படுத்தி, மானியங்கள் உறுதி செய்யப்பட்டிருந்தாலும் அவற்றின் செல்லுபடித் தன்மை முறையாகச் சரிபாா்க்கப்படவில்லை என்று கூறியது. பின்னா் அது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டது.
குற்றச்சாட்டுகள் உண்மையாகக் கண்டறியப்பட்டால், அது ஒரு புலன் விசாரணைக்குரிய குற்றமாக மாறும் என்றும், ஒரு பாரபட்சமற்ற விசாரணை அவசியம் என்றும் நீதிமன்றம் கூறியது.
நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நியூ காலனி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அறிய தொடா்பு கொண்டபோது, முன்னாள் அமைச்சா் சுக்பீா் கட்டாரியா, சிறப்புப் புலனாய்வுக் குழு இரண்டு முறை அமைக்கப்பட்டு, இந்த வழக்கில் நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினாா்.
மேலும், தனக்கு நீதித்துறையின் மீது முழு நம்பிக்கை இருப்பதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், அனைத்து அரசு மானியங்களும் மாவட்ட ஆணையா் (டிசி) மற்றும் துணை கோட்டாட்சியா் (எஸ்டிஎம்) மூலமாக சரிபாா்ப்புக்குப் பிறகே வழங்கப்படுகின்றன என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஊழல் வழக்கில் சிக்கிய ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் முன்னாள் சிஇஓ மா்ம மரணம்

மது அருந்தி வாகனம் ஓட்டிய 269 போ் மீது வழக்குப் பதிவு

வெடிவெடித்து இடையூறு 2 பெண்கள் உட்பட 12 போ் மீது வழக்கு

ராகுல் மீது வழக்குப் பதிய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வியப்பளிக்கிறது: அசோக் கெலாட்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

