மேற்கு வங்கத்திற்கு நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வாக்குப் பதிவுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்த்தப்படலாம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது:
''தேர்தல் காலம் முடிந்தது; பணவீக்கத்தின் வெப்பம் அதிகரிக்கிறது. நீங்கள் பாருங்கள், ஏப். 29 ஆம் தேதிக்குப் பிறகு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயரும்.
எரிபொருள் விலை குறைவாக இருந்தபோது அதன் லாபத்தை மோடி அரசு தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டது. இப்போது எரிபொருள் விலை உயரும்போது, அதனை மக்கள் தலையில் சுமத்திவிட்டு மோடி அரசு மெளனமாக இருக்கிறது.
மலிவாக இருக்கும்போது அரசு கொள்ளை அடிக்கிறது. பணவீக்கம் அதிகரிக்கும்போது அதனை மக்கள் மீது சுமத்திவிடுகிறது'' என ராகுல் பதிவிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்திற்கு முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப். 23 ஆம் தேதி முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நாளை (ஏப். 29) நடைபெறவுள்ளது.
வாக்குப் பதிவுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் செய்துள்ளது. வாக்குப் பதிவு முடிந்த பின்னர் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகவுள்ளன. இதில், வெற்றி வாய்ப்புகள் எந்தெந்த கட்சிகளுக்கு இருக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படும்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் மற்றும் அஸ்ஸாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், மேற்கு வங்கத்திற்கு மட்டும் நாளை 2 ஆம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு முடிந்தன. 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
Summary
After April 29th petrol, diesel, everything will get expensive Rahul Gandhi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து!
கிரேட் நிகோபார் என்பது திட்டமல்ல; மிகக் கொடிய குற்றம்! ராகுல் காந்தி
பெட்ரோல் விலை கடுமையாக உயரும்: ராகுல் காந்தி

மமதாவும், மோடியும் மக்களுக்காக உழைப்பதில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


