தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில், தவெக 105 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது.
திமுக 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், அதிமுக 50 -க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.
தவெக ஆட்சி அமைக்க 118 தொகுதிகள் தேவை என்பதால், சில கட்சிகளுடன் ஆதரவு கோரி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, விஜய்யை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 4 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
தேர்தலுக்கு முன்னதாக தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Summary
Rahul Gandhi extends telephonic greetings to TVK leader Vijay!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தருணத்துக்காகக் காத்திருந்த வரலாறு: விஜய்க்கு சிலம்பரசன் வாழ்த்து!

தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து!
நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது: சூர்யா

தவெக தலைவர் விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


