தவெக - காங்கிரஸ் கூட்டணி அமையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் ராகுல் காந்தியின் எக்ஸ் பதிவு வைரலாகி வருகின்றது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில் 234 தொகுதிகளுக்கும் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.
தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆளும் திமுக அரசின் கூட்டணி 73 இடங்களைப் பிடித்து ஆட்சியை இழந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுக முக்கியத் தலைவர்கள் பலரும் தோல்வியடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
விஜய் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காத நிலையில் திமுக, அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அவருடன் இணைய வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், விஜய்க்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி அதுபற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், திமுக பற்றி அவர் எந்தப் பதிவும் போடவில்லை.
ராகுல் காந்தியின் பதிவு - dinmani online
அதுமட்டுமின்றி, காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில் ராகுல் காந்தி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த பதிவை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் நேற்றிலிருந்து பின் (pin) செய்து வைத்திருந்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
மேலும், திமுக இன்று நடத்தும் கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்பது சந்தேகமே என்றும் கூறப்படுகிறது.
Summary
TVK-Congress Alliance? What Does Rahul Gandhi's Post Suggest?!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து!

தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் எச்சரிக்கை

ராகுல் காந்தியின் தமிழகம் வருகை எப்போது?

மருத்துவமனையில் சோனியா... ராகுல் காந்தியின் கேரள பிரசாரம் ஒத்திவைப்பு!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

