தலைநகர் அமராவதி பசுமைப் பரப்பு திட்டத்துக்காக நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 குத்தகை வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதியை உலகத்தரம் வாய்ந்த ஒரு நவீன நகரமாக உருவாக்குவதற்காக நிலங்கள் பெறப்பட்டு வருகிறது.
ஆந்திர மாநிலம், அமராவதியில் நில ஒருங்கிணைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் தங்களது நிலங்களை வழங்கிய விவசாயிகளுக்கு குத்தகைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஏக்கர் நிலத்துக்கு ரூ. 40,000 குத்தகைத் தொகையாக பத்தாண்டுகளுக்கு வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
குத்தகைத் தொகையை ஆண்டுக்கு ரூ.3000 உயர்த்துவதாக உறுதியளித்ததோடு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1.5 லட்சம் பயிர்க் கடன் வழங்கவும் முதலமைச்சர் ஒப்புக்கொண்டதாக சனிக்கிழமை (ஏப்.18) வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி அமைச்சர் பி. நாராயணா, மொத்தம் 31,150 விவசாயிகள் கிட்டத்தட்ட 34,983 ஏக்கர் நிலத்தை வழங்கியதாக ஏப்ரல் 10 ஆம் தேதி கூறியிருந்தார்.
பசுமைப் பரப்புகளை உருவாக்க விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நிலங்கள் உள்பட, அமராவதியில் ஏற்கனவே 54,000 ஏக்கர் நிலத்தை ஆந்திர அரசு ஒருங்கிணைத்துள்ளது.
மேலும், அமராவதியைச் சுற்றி சாலை அமைப்பதற்கும், ரயில் நிலையம் கட்டுவதற்கும், ரயில் பாதை அமைப்பதற்கு, சர்வதேச விளையாட்டு நகரம் கட்டுவதற்கு என பல்வேறு பணிகளுக்குக் கூடுதல் நில ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது என்று நாராயணா குறிப்பிட்டார்.
Summary
Andhra Chief Minister N. Chandrababu Naidu has announced that a lease amount of Rs. 40,000 per acre will be provided under the second phase of land acquisition for Amaravati.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமராவதி பாலியல் வழக்கு! யாருக்கு அதிக தோழிகள்? பந்தயம் கட்டிய குற்றவாளிகள்
ஆந்திர தலைநகா் மேம்பாட்டுக்கு ரூ.3,165 கோடி: உலக வங்கி விடுவித்தது!

ஆந்திரத்தின் தலைநகர் அமராவதி! அரசிதழில் வெளியீடு!

ஆந்திரத்தின் ஒரே தலைநகர் அமராவதி! மக்களவையில் மசோதா நிறைவேற்றம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

