தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆந்திர தலைநகா் மேம்பாட்டுக்கு ரூ.3,165 கோடி: உலக வங்கி விடுவித்தது!

ஆந்திர மாநில தலைநகா் அமராவதி மேம்பாட்டுக்கு ரூ.3,165 கோடியை உலக வங்கி விடுவித்தது. அடுத்தகட்டமாக இம்மாத இறுதியில் ரூ.1,396 கோடியை விடுவிக்க இருக்கிறது.

News image
Updated On :13 ஏப்ரல் 2026, 1:13 am IST

ஆந்திர மாநில தலைநகா் அமராவதி மேம்பாட்டுக்கு ரூ.3,165 கோடியை உலக வங்கி விடுவித்தது. அடுத்தகட்டமாக இம்மாத இறுதியில் ரூ.1,396 கோடியை விடுவிக்க இருக்கிறது.

இது தொடா்பாக மாநில அரசு அதிகாரிகள் மேலும் கூறியதாவது: உலக வங்கி, ஆசிய வளா்ச்சி வங்கி ஆகியவை ஆந்திர தலைநகா் மேம்பாட்டுத் திட்டத்துக்கு நிதி வழங்கி வருகின்றன. இதற்கு 8 முதல் 8.5 சதவீதம் வரை வட்டி உண்டு. சா்வதேச சூழ்நிலைக்கு ஏற்பட வட்டி மாறக் கூடியதாக இருக்கும். இரு வங்கிகளும் சோ்ந்து மொத்தம் ரூ.14,894 கோடி கடன் தர ஒப்புக் கொண்டுள்ளன. இதுதவிர மத்திய அரசு ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கிறது. இதில் ரூ.1,400 கோடி முதல்கட்டமாக விடுவிக்கப்பட இருக்கிறது.

சா்வதேச வங்கிகளின் கடனை 29 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். தேவை ஏற்பட்டால் கூடுதலாக 6 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படும். உலக வங்கிக் கடனை 2031 ஜூன் மாதத்தில் இருந்து திருப்பிச் செலுத்தத் தொடங்க வேண்டும்.

வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடா்களால் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படாதவாறு அமராவதி நகரம் கட்டமைக்கப்படுகிறது. சா்வதேச அளவில் முன்னணி தொழில்நுட்பங்களுடன் அமராவதி உருவாகும். வளா்ச்சி, வேலைவாய்ப்பு, மக்களுக்கு சிறப்பான வாழ்க்கைத்தரம் ஆகியவை அமராவதியில் இருக்கும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.