மகாராஷ்டிர மாநிலத்தின் அமராவதி நகரில் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் 200 சிறுமிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக நாட்டையே உலுக்கும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் சிறுமிகளின் பாலியல் விடியோக்கள் கசிந்தது குறித்து விசாரணை நடத்திய மகாராஷ்டிர காவல்துறைக்கு அதன் பின்னால், இவ்வளவு பெரிய பாலியல் மோசடி இருக்கும் என்று நினைத்திருக்க மாட்டார்கள்.
சிறுமிகளை காதல் வளையில் வீழ்த்தி, பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதனை விடியோ எடுத்துக் கொண்டு மிரட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக முக்கியக் குற்றவாளிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அயன் அகமது, உசர் கான் என்ற இரண்டு இளைஞர்களும், தங்களில் யாருக்கு அதிக பெண் தோழிகள் சிக்குகிறார்கள் என்ற பந்தயம் கட்டிக்கொண்டு இந்த வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களிடம் பழகி 4 முதல் 5 மாதங்களில் அவர்களது முழு நம்பிக்கையைப் பெற்று, பாலியல் ரீதியாக உறவை ஏற்படுத்தி, அதனை விடியோ எடுத்து மிரட்டுவதை இவர்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
அயனுக்கும் உசருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலின்போது, ஒருவருடைய விடியோவை மற்றொருவர் ஆன்லைனில் வெளியிட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
வெளியூர்களில் இருந்து படிக்க தங்கள் பகுதிக்கு வந்திருந்த பெண்களையே இவர்கள் இலக்காக் வைத்திருக்கிறார்கள். இவர்கள் இருப்பிடங்களிலிருந்து குற்றத்துக்கான சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
200க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் நேரடியாக வந்து புகார் அளிக்கவும் சாட்சியமளிக்கவும் முன் வர அஞ்சுவதால் காவல்துறை விசாரணை சவாலாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
கட்டோர நகா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிரப்பின் மூன்றாவது மாடியில் இருந்த வீட்டைத்தான் குற்றவாளிகள் குற்றச் செயலுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டில் ஏதோ தவறான செயல் நடப்பதாக தொடர்ந்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததே, இந்த அளவுக்கு நிலைமை மோசமானதற்கக் காரணம் என்றும் குற்றம்சாட்டுகிறார்கள்.
Summary
Amaravati sex case Who has more girlfriends? The culprits made a bet
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

தலைநகர் அமராவதி! நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 குத்தகைத் தொகை: ஆந்திர முதல்வர்

ஆந்திரத்தின் தலைநகர் அமராவதி! அரசிதழில் வெளியீடு!

ஆந்திரத்தின் ஒரே தலைநகர் அமராவதி! மக்களவையில் மசோதா நிறைவேற்றம்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


