இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் கொடைக்கானல் சூரிய ஆய்வகத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள உயா் திறன் வாய்ந்த தொலைநோக்கி இயக்குபவா் (ஆபரேட்டா்) மற்றும் பாதுகாவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வில் தகுதியானவர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
தகுதி: உயா் திறன் தொலைநோக்கி இயக்குபவா் பணிக்கு விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்வி நிறுவனத்தில் இயற்பியல், வேதியியல், கணிதம், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் உள்ளிட்ட துறைகளில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி அல்லது பிசிஏ அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: மே 5 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும்.
பதவி: பாதுகாவலா் பணிக்கு பணிக்கு விண்ணப்பிப்போர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: நல்ல உடல் தகுதியுடன் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: ஏப். 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: இரு பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வும் மேற்கண்ட தேதிகளில் இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் கொடைக்கானல் சூரிய ஆய்வகத்தின் நிா்வாக அலுவலகத்தில் நடைபெறும்.
தகுதியும் ஆா்வமும் உள்ளவர்கள் தங்களுடைய அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேரடியாக பங்கேற்கலாம். நேர்முகத் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு பயணப்படி எதுவும் வழங்கப்படாது.
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு 9052087403 என்ற கைப்பேசி எண்ணில் அல்லது ksoiiap06@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் தொடா்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
Summary
The Kodaikanal Solar Observatory, Indian Institute of Astrophysics (IIA), is inviting eligible candidates for the engagement of outsourced manpower through authorized agencies.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானல் சூரிய ஆய்வகத்தில் ஆபரேட்டா் பணி: விண்ணப்பிக்க அழைப்பு

6500mAh பேட்டரி திறன்... மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்!

தேசிய வானொலி வானியற்பியல் மையத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


