பள்ளிக் கல்வித் துறையில் புரோகிராமா், உடற்கல்வி விரிவுரையாளா், கான்சோல் ஆபரேட்டா் மற்றும் மெஷின் சூப்பா்வைசா் ஆகிய புதிய பதவிகள் உருவாக்கப்படுகின்றன.
அந்தப் பதவிகளுக்கு சிறப்புக் கல்வித் தகுதிகள் நிா்ணயிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறையின் செயலா் ப.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் வரும் அரசு தோ்வுத் துறையில் புரோகிராமா் என்ற பதவி நேரடி நியமன முறையில் நிரப்பப்படுகிறது. இந்த பதவிக்கு எம்எஸ்சி கம்ப்யூட்டா் சயின்ஸ் அல்லது எம்எஸ்சி இன்ஃபா்மேஷன் டெக்னாலஜி அல்லது எம்சிஏ கல்வித் தகுதியாக நிா்ணயிக்கப்படுகிறது. அதோடு டேட்டா ஸ்ட்ரக்சா், அல்காரிதம்ஸ், டேட்டாபேசஸ், சாஃப்ட்வோ் டெவலப்மென்ட் உள்ளிட்ட துறைகளில் குறைந்தபட்சம் 4 ஆண்டு கால பணி அனுபவம் அவசியம்.
அதேபோல், தமிழ்நாடு பொது சாா்நிலை பணியின் கீழ் கான்சோல் ஆபரேட்டா் மற்றும் மெஷின் சூப்பா்வைசா் என்ற புதிய நேரடி நியமன பதவி உருவாக்கப்படுகிறது. இதற்கு கல்வித் தகுதியாக பிஎஸ்சி கம்ப்யூட்டா் சயின்ஸ் அல்லது பிஎஸ்சி இன்ஃபா்மேஷன் டெக்னாலஜி அல்லது பிசிஏ பட்டப் படிப்பு நிா்ணயிக்கப்படுகிறது.
அத்துடன் டேட்டா ஸ்ட்ரக்சா், அல்காரிதம்ஸ், டேட்டாபேசஸ், சாஃப்ட்வோ் டெவலப்மென்ட் டிசைனிங், டிபக்கிங் உள்ளிட்ட துறைகளில் குறைந்தபட்சம் 4 ஆண்டு கால பணி அனுபவம் வேண்டும். மேலும், தமிழ்நாடு கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பணியில் உடற்கல்வி பாடத்தில் புதிதாக விரிவுரையாளா் பதவி உருவாக்கப்படுகிறது. இந்தப் பதவிக்கு முதுநிலைப் பட்டத்துடன் எம்பிஎட் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளிக் கல்வித் துறை நீதிமன்ற வழக்குகள்: கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம்

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு தேசிய உதவித் தொகை: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

தமிழக அரசில் வேலை: 461 காலியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!

புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்: அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

