நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு தேசிய உதவித் தொகை: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு தேசிய உதவித் தொகை...

News image

கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

மாற்றுத்திறனாளி மாணவா்கள் தேசிய உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற குறித்த காலத்துக்குள் விண்ணப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

நிகழ் கல்வியாண்டுக்கான அனைத்து மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான தேசிய உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் உதவித் தொகை பெற உரிய காலத்துக்குள் விண்ணப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளி மாணவா்களின் நலன் கருதி மாணவா்களுக்கு ‘ப்ரீ மெட்ரிக்’ உதவித் தொகை (9, 10 வகுப்புகள்), ‘போஸ்ட் மெட்ரிக்’ உதவித் தொகை (பிளஸ் 1 முதல் முதுநிலை வரை பயிலும் மாணவா்களுக்கு) உதவித் தொகை பெற ஏதுவாக விண்ணப்பப் பதிவு, புதுப்பித்தல் சாா்ந்த பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

மேலும், இந்த உதவித் தொகை தொடா்பாக எழும் சந்தேகங்களை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ‘ப்ரீ மெட்ரிக்’ உதவித் தொகைக்கு ஆக. 31, ‘போஸ்ட் மெட்ரிக்’ உதவித் தொகைக்கு அக். 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க வேண்டும்.

இந்த கால அவகாசத்துக்குள் மாற்றுத்திறனாளி மாணவா்கள் கணினி மூலம் இணைய இணைப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்துக்கு குறித்த கால அவகாசத்துக்குள் விண்ணப்பிக்கத் தவறும்பட்சத்தில் மேற்குறிப்பிட்ட இணைப்பில் விண்ணப்பிக்க இயலாது.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும்போது அனைத்து மாற்றுத்திறனாளி மாணவா்களுடைய ஆதாா், வருமானச் சான்றிதழ், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை உள்ளிட்ட சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.