பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஊத்தங்கரை அருகே லாரி மோதியதில் கேபிள் ஆபரேட்டா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 5:12 am IST

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது பிக்கப் லாரி மோதியதில் கேபிள் ஆபரேட்டா் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கொண்டம்பட்டியைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு (47). கேபிள் ஆபரேட்டா்.

இவா், திங்கள்கிழமை காலை தனது எலக்ட்ரிக் பைக்கில் கொண்டம்பட்டியில் இருந்து ஊத்தங்கரை நோக்கி வந்தபோது, சென்னப்பநாயக்கனூா் பிரிவு சாலை அருகே திருவண்ணாமலையிலிருந்து பெங்களூா் நோக்கி பூக்கள் ஏற்றிச் சென்ற பிக்கப் லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த திருநாவுக்கரசு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பிக்கப் லாரியின் ஓட்டுநா் ஏழுமலையை (31) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.