மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000! வேளாண் கடன் தள்ளுபடி!

திருப்பூர் பிரசாரத்தில் விவசாயிகள், காவல் துறைக்கு விஜய் அளித்த வாக்குறுதிகள் குறித்து...

News image

விஜய் - யூடியூப் / தவெக

Updated On :14 ஏப்ரல் 2026, 6:00 pm IST

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தில் விவசாயிகள், காவலர்களுக்கான தவெக திட்டங்கள் குறித்து விஜய் பேசியதாவது:

  • ''5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு வேளாண் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்.

  • 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் வேளாண் கூட்டுறவு கடன் பகுதியளவு தள்ளுபடி செய்யப்படும்.

  • குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்.

  • நெல் குவிண்டாலுக்கு 3500 ரூபாயும், கரும்பு டன் ஒன்றுக்கு 4500 ரூபாயும் வழங்கப்படும்.

  • குத்தகை விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 ஆதரவுத் தொகை.

  • பயிர் காப்பீடு திட்டத்தின்படி 100% பயிர் பாதுகாப்பு செய்யப்படும்.

  • நமது அரசு ஊழியர்களின் நலனுக்காக பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் வழங்குவது குறித்து பரிசீலனை மற்றும் மதிப்பீடு செய்யும்.

  • 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தொடர்ச்சியாக அரசுப் பணிநிறைவு செய்துள்ள தற்காலிக ஆசிரியர்கள், செவிலியர்கள், எழுத்தர்களை பணி நிரந்தரம் செய்யும்.

  • பதவி உயர்வுக்கு பணம் பெறும் கலாசாரத்தை தவெக அரசு முடிவுக்கு கொண்டுவரும்.

  • அரசு ஊழியர்களின் இடமாற்றம், காலவரையறைக்கு உட்படுத்தப்பட்டு வெளிப்படையாக நடக்கும்.

  • காவலர்களின் அடிப்படை மாத ஊதியத்தை 18 ஆயிரத்தில் இருந்து , 25 ஆயிரம் ரூபாயாக தவெக அரசு உயர்த்தும்.

  • அழுத்தம் நிறைந்த பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு பணிப் படியாக மாதம் ரூ. 1000 கூடுதலாக வழங்கப்படும்

  • காவலர்களின் நலன் மற்றும் பணி பாதுகாப்பு சட்டத்தை தவெக இயற்றும். இதன்படி, காவலர்களின் பணி நேரங்கள் முறைப்படுத்தப்படும்.

  • வாரம் ஒரு நாள் விடுமுறை உறுதிப்படுத்தப்படும். சலவைப் படி ரூ. 500லிருந்து ரூ. 1000 ஆக உயர்த்தப்படும்.

  • மதுரை, கோவை, நெல்லை,சேலம் வேலூர் ஆகிய இடங்களில் காவலர் நல மருத்துவமனைகள் நிறுவப்படும்.

  • பெண் காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளுக்கு பணியமர்த்தப்பட மாட்டார்கள். தனி ஓய்வறைகள், நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்படும்'' என விஜய் வாக்குறுதி அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.