ஐஸ்கிரீம் சாப்பிடும் குழந்தைபோல தவெக தலைவர் விஜய் பேசுவதாகவும் அவரை அரசியலில் ஒரு ஜோக்கராக மக்கள் பார்ப்பதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தமுறை 4 முனை போட்டியாக இருந்தாலும் களத்தில் உண்மையான போட்டி திமுக - தவெக இடையில் மட்டுமே என்று விஜய் பேசியது பற்றி அதிமுக மூத்தத் தலைவரும் சிவகாசி தொகுதி வேட்பாளருமான ராஜேந்திர பாலாஜியிடம் செய்தியாளார்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், ”ஐஸ்கிரீம் சாப்பிடும் பள்ளிக் குழந்தைகள் இப்படித்தான் விளையாட்டாக பேசுவார்கள். அதுமாதிரி விஜய்யும் விளையாட்டுத் தனமாகப் பேசுகிறார். ஊர் உலகத்தில் என்ன நடக்கிறதென்று நாட்டில் எல்லோருக்கும் தெரியும். இருந்தும் இப்படி பேசுகிறாரென்றால் அவர் வார்த்தையில் எவ்வளவு விளையாட்டுத்தனம் இருக்கிறது.
அவர் சினிமாவில் சிரிப்பு நடிகராகவும் ஆக்ஷன் நடிகராகவும் நடிக்கலாம். ஆனால், அரசியலில் அவரது நடிப்பு எடுபடாது. அவரை ஒரு வேடிக்கைப் பொருளாக தமிழக வாக்காளர்கள், அரசியல் ஆர்வலர்கள் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். விஜய்யின் பேச்சு ஒரு நல்ல அரசியல் தலைவராக உருவாகக் கூடியவரின் பேச்சாகத் தெரியவில்லை.
உலகத்துக்கே தெரியும் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என்று. களத்தில் இருக்கக்கூடியவர்கள் இரண்டு சிங்கங்கள் தான். ஒன்று அதிமுக தலைமையான எடப்பாடியார். மற்றொன்று திமுக தலைமையான ஸ்டாலின். இதில் வெற்றிபெறப்போவது யார் என்பதுதான் இன்றைய பேச்சுப்பொருள். இதில், அதிமுக வெல்லும் என்பது 100% மக்களுடைய கருத்துக்கணிப்பு. இதனிடையில் வந்து நான் தான், நான் தான் என்று விஜய் சொல்வதை வேடிக்கைப் பொருளாகவும், அவரை சிரிப்பு நடிகராகவும் மக்கள் பார்க்கிறார்கள். அரசியலில் அவர் ஒரு ஜோக்கராக இருக்கிறார்.
தவெக-வில் அவர் அறிவித்த 234 வேட்பாளர்களில் ஒன்றிரண்டு பேரைத் தவிர அனைவரும் மிகப்பெரிய பின்னடைவைச் சந்திப்பார்கள்” என்று பேசியுள்ளார்.
விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுவது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, “அவருக்கே தன்னம்பிக்கை இல்லை. அதனால்தான் 2 இடத்தில் நிற்கிறார். அவர் ஒரு ஜாலி மூடில் இருக்கிறார். அவர் பேச்சு, நடவடிக்கையை நாம் காமெடியாகப் பார்த்து விட்டுவிட வேண்டும்” என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
Summary
Remarks made by former AIADMK Minister and Sivakasi constituency candidate, Rajendra Balaji on TVK chief Vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரோடு கிழக்குத் தொகுதியில் தவெக வேட்பாளா் வெற்றி

தவெக வெற்றி பெறுமா? அதிமுக முன்னாள் அமைச்சர் பதில்

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

விக்ரம் - வேதா - விஜய்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

