தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

குதிரையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர் சூர்யா!

தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகக் களம் கண்டுள்ள சூர்யா,

News image

குதிரையில் வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர் சூர்யா - DPS

Updated On :2 ஏப்ரல் 2026, 4:50 pm IST

கோவை, தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தல் களத்தில் இந்து மக்கள் கட்சியின் ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராகக் களம் கண்டுள்ள சூர்யா, வழக்கமான தேர்தல் வாகனங்களைத் தவிர்த்து குதிரை மீது அமர்ந்து ஊர்வலமாக வந்து தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் ஆணைக்கிணங்க இந்தத் தேர்தலைச் சந்திப்பதாகக் குறிப்பிட்ட அவர், "ஊழல்வாதிகளை 'குதிரை வேகத்தில்' துரத்தவே இந்த வித்தியாசமான பாணியைக் கையாண்டதாகத் தெரிவித்தார். அதிகார மையங்களில் நிலவும் பணப் பரிமாற்றங்களையும், அதிகார வர்க்கத்தின் மெத்தனத்தையும் நேரடியாகச் சாடிய அவர், இது வெறும் தேர்தல் மட்டுமல்ல, ஒரு தர்ம யுத்தம் எனக் கூறினார்.

தொண்டாமுத்தூர் தொகுதியில் திராவிடக் கட்சிகள் பணத்தை வாரி இறைத்து ஜனநாயகத்தை 'பணநாயகமாக' மாற்றி உள்ளதாகச் சுட்டிக்காட்டிய சூர்யா, வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் கலாசாரம் உச்சத்தை எட்டி உள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

குறிப்பாக, எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சியும் மாறி, மாறி ஊழலில் ஈடுபட்டு வருவதாகவும், வாக்கிற்குப் பத்தாயிரம் ரூபாய் வரை பேசப்படுவதாகவும் அவர் பகிர் தகவலை வெளியிட்டார். எங்களிடம் பணம் இல்லை, ஆனால் மக்களின் ஆதரவு இருக்கிறது. மக்கள் பணத்தை வாங்கிக் கொள்ளட்டும், ஆனால் வாக்களிக்கும்போது மாற்றத்திற்காக எங்களுக்கே வாக்களிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

நொய்யல் நதியை இணைப்பது உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவலத்தை மாற்றி, மக்களோடு மக்களாக நின்று பணியாற்றவே தான் போட்டியிடுவதாக அவர் கூறினார்.

சாமானிய மனிதர்கள் அரசியல் களத்தில் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபிப்பதே தனது இலக்கு என்று உறுதியுடன் கூறினார்.

Summary

Surya, an independent candidate contesting the election in the Thondamuthur constituency of Coimbatore with the support of the Hindu Makkal Katchi, eschewed conventional campaign vehicles and arrived in a procession seated atop a horse to file his nomination papers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.