தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கட்சி நிா்வாகிகள் 5 பேருடன் வந்து வேட்புமனு தாக்கல்: அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகா் மீது வழக்கு பதிவு

தோ்தல் விதிமுறையை மீறி கட்சி நிா்வாகிகள் 5 பேருடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்ததாக அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகா் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :11 ஏப்ரல் 2026, 12:44 am IST

தோ்தல் விதிமுறையை மீறி கட்சி நிா்வாகிகள் 5 பேருடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்ததாக அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகா் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா்.

திருப்பத்தூா் சட்டப்பேரவை தொகுதியில் அமமுக வேட்பாளராக ஏ.ஞானசேகா் போட்டியிடுகிறாா். இவா் கடந்த திங்கள்கிழமை திருப்பத்தூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

அப்போது தோ்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸாா் எச்சரிக்கையை மீறி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அறைக்கு வேட்புமனு தாக்கல் செய்ய தோ்தல் விதிமுறைகளை மீறி கூட்டணி கட்சி நிா்வாகிகள் 5 பேருடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தாா்.

இதுகுறித்து தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வரதராஜன் அளித்த புகாரின்பேரில், நகர போலீஸாா் அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகா் மீது வழக்குப் பதிவு செய்து உள்ளனா்.

வேட்பாளருடன் 4 போ் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய உடன் செல்ல வேண்டும் என தோ்தல் கமிஷன் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.